ஜடேஜா இல்லாம இந்தியா ஜெயிக்க முடியாது தான் ஆனா அதுக்காக அந்த ஜாம்பவானோட கம்பேர் பண்ணாதீங்க – மஞ்ரேக்கர் விமர்சனம்

Sanjay
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி ரத்து செய்யப்பட்டதால் 1 புள்ளியை மட்டுமே பெற்ற இந்தியா நேபாளுக்கு எதிரான 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 230 ரன்களை எடுத்தது அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 58 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதை தொடர்ந்து பேட்டிங் செய்த போது மழை வந்ததால் 23 ஓவரில் 145 ரன்கள் தேவை என்று நிர்ணயிக்கப்பட்ட புதிய இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 74* ரன்களும் சுப்மன் கில் 67* ரன்களும் விளாசி எளிதாக வெற்றி பெற வைத்தனர். முன்னதாக இப்போட்டியில் நேபாள் கேப்டன் ரோஹித் பௌடேல் 5, பீம் சர்க்கி 7, மல்லா 2 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி 3 விக்கெட்டுகளை சாய்த்த ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்தார்.

- Advertisement -

கம்பேர் பண்ணாதீங்க:
குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் முதன்மை ஆல் ரவுண்டராக விளையாடப் போகும் அவர் கடந்த 22 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட் மட்டுமே எடுத்தது ரசிகர்களிடம் கவலையாக இருந்தது. இருப்பினும் தற்போது 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ள அவர் 2023 உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட 2011 உலகக் கோப்பையை வெல்லும் முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங் போல் அசத்துவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் 2019 உலகக் கோப்பைக்கு பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்படும் அவர் 2023 ஐபிஎல் கோப்பையை சென்னை வெல்வதற்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றி ஃபைனலில் அபார ஃபினிஷிங் கொடுத்து தற்சமயத்தில் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா முக்கியமான வீரர் என்றாலும் அதற்காக யுவராஜ் சிங்குளுடன் ஒப்பிடாதீர்கள் என சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் விளையாடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் அவர் இல்லாமல் இந்தியாவால் சிறப்பாக செயல்பட முடியாது. அக்சர் படேல் இருந்தாலும் ரவீந்திர ஜடேஜா தான் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர். குறிப்பாக பிட்ச் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவர் உங்களுக்கு 10 ஓவர்களை வீசுவார். ஆனால் 2011 உலகக் கோப்பையில் நம்மிடம் பேட்டிங் யுவராஜ் சிங் இருந்தார். எனவே அவருடன் ஜடேஜாவை ஒப்பிடுவது நியாயமல்ல”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் 11 வருட சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா – கோலியையும் மிஞ்சி அசத்தல்

“அதனால் அவரை நான் 7, 8வது இடத்தில் மட்டுமே அசத்தக்கூடிய பவுலிங் ஆல் ரவுண்டராகவே பார்க்கிறேன். அவருடைய ஒய்ட் பால் கேரியர் தமிழகத்தை வருடங்களில் நன்றாக முன்னேறியுள்ளது. ஏனெனில் ஆரம்பத்தில் நல்ல டெஸ்ட் பவுலராக இருந்த அவர் ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் முழுமையாக வீச முடியாமல் தவித்தார். இருப்பினும் கடந்த 3 வருடங்களில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement