- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ராகுல் ஓப்பனிங்லயே இருக்கட்டும்.. ரோஹித்தை அங்க இறங்க சொல்லுங்க.. முன்னாள் இந்திய வீரர் அட்வைஸ்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்த உதவியுடன் 150 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்டிய இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதன் பின் விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 487-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இறுதியில் 534 ரன்களை துரத்தும் ஆஸ்திரேலியா 3வது நாள் முடிவில் 12-3 என தடுமாறி வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியா 522 ரன்கள் முன்னிலையில் பெற்றிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

அசத்திய ராகுல்:

முன்னதாக இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தம்முடைய சொந்த காரணத்திற்காக இந்திய அணிக்காக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தலைமை தாங்கும் பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து 2வது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்துள்ளார். அதே போல ரோஹித்துக்கு பதிலாக பேட்டிங்கில் சுமாரான ஃபார்மில் இருக்கும் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வாய்ப்பில் அபாரமாக விளையாடிய ராகுல் முதல் இன்னிங்ஸில் 26 ரன்கள் குவித்து தவறான தீர்ப்பால் அவுட்டானார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் அபாரமாக விளையாடிய அவர் 77 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு கை கொடுத்து ஃபார்முக்கு திரும்பி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அவருடன் ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி ரன்கள் 100* ரன்கள் எடுத்ததால் இந்திய அணி முதல் போட்டியிலேயே வெற்றியை நெருங்கியுள்ளது.

- Advertisement -

ராகுல் ஓப்பனிங்:

இந்நிலையில் ரோகித் சர்மா வந்தால் அடுத்த போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடலாம் என முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கேஎல் ராகுலை இந்த தொடர் முழுவதும் துவக்க வீரராக விளையாட வையுங்கள். நம்முடைய அணியின் நலனுக்காக இடத்தை மாற்றாதீர்கள்”

இதையும் படிங்க: 60/6 என சரிந்து மழையால் மண்ணை கவ்விய பாகிஸ்தான்.. ஜிம்பாப்வே வரலாற்று சாதனை வெற்றி

“ஆஸ்திரேலியா போன்ற சவாலான சூழ்நிலைகளில் அவர் புதிய பந்தை சமாளித்து விளையாடுவதற்கு சிறந்தவர். ரோஹித் மிடில் ஆர்டரில் விளையாடலாம். இது சாதாரண பொது அறிவு” என்று கூறினார். அதாவது ரோகித் சர்மாவும் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் திரும்பும் போது 3வது இடம் போன்ற மிடில் ஆடலில் விளையாடலாம். ஆனால் ராகுல் தொடர்ந்து துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று கணேஷ் கூறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -