தினேஷ் கார்த்திக்கோட வாழ்க்கை மாறியதே அவரால தான் – தினேஷ் கார்த்திக்கின் தந்தை பேட்டி

DK-and-His-Father
- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இன்றளவும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். சொல்லப் போனால் தோனிக்கு முன்னதாக அறிமுகமாகிய அவர் தோனியின் இடம் காரணமாக இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடித்து விளையாட முடியவில்லை என்றாலும் அவ்வப்போது தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இன்றளவும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

DInesh Karthik

- Advertisement -

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் அத்துடன் அவரது கரியர் முடிந்தது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அற்புதமான பினிஷராக செயல்பட்டார். அதன் பின்னர் மீண்டும் டி20 அணியில் இடம் பிடித்த அவர் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

இப்படி 37 வயதிலும் இவர் கொடுத்த கம்பேக் யாராலும் மறக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் இப்படி இந்திய அணிக்காக மீண்டும் இடம் பிடித்திருப்பதும், அவரது வாழ்க்கையே மாறியது ஒருவரால் மட்டுமே என தினேஷ் கார்த்திக்கின் தந்தை கிருஷ்ணகுமார் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணிக்காக விளையாடிய போது தான் உள்ளூர் கிரிக்கெட் லெஜெண்ட் மற்றும் ஐபிஎல் பயிற்சியாளரான அபிஷேக் நாயரின் அறிமுகம் கிடைத்தது.

Dinesh Karthik

அவர்தான் தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கையை தற்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று மீண்டும் இந்திய அணியில் இடம் பெற வைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் : தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கையில் அபிஷேக் நாயர் வந்த பிறகு அவருடைய கரியர் முற்றிலுமாக மாறிவிட்டது. தினேஷ் கார்த்திக் காலை 2 மணிக்கு எல்லாம் எழுந்து பயிற்சியை துவங்கி விடுவார். வழக்கமாகவே டாப் ஆர்டரில் விளையாடி பயின்று வந்த தினேஷ் கார்த்திக் பவர் ஹிட் செய்வதற்காக தனியாக ஒருவரை வேலைக்கு எடுத்து அவருடன் சேர்ந்து தீவிர வலை பயிற்சியில் ஈடுபடுவார்.

- Advertisement -

தினமும் தினேஷ் கார்த்திக் இரண்டு மணிக்கு எழுந்து பயிற்சிக்கு செல்லும் போது நானும் செல்வது வழக்கம். அப்படி தொடர்ச்சியான கடினமான உழைப்புக்குப் பிறகு தற்போது மீண்டும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் விளையாடி வருகிறார். அவருக்கும் அபிஷேக் நாயருக்கும் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையை கூட வீடியோ எடுக்க சொல்லுவார். மேலும் இந்த வீடியோவை பிறகு பார்த்தால் அது பயன்படும் என்றும் கூறுவார். அவர்கள் இருவரும் இயல்பாக பேசிக்கொள்ள கொள்வதை என்னால் ஒரு சாதாரண மனிதனாக கூற முடியவில்லை.

இதையும் படிங்க : பிரச்சனையே நீங்கதான் எப்போ பேட்டில் ரன் அடிப்பீங்க – கேப்டன் ரோஹித் மீது ஜாம்பவான் அதிருப்தி

ஆனாலும் தற்போது தினேஷ் கார்த்திக்கின் இந்த பலமான வருகைக்கு காரணம் அபிஷேக் நாயர் தான் காரணம் என தினேஷ் கார்த்திக்கின் தந்தை கிருஷ்ணகுமார் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் 16 போட்டிகளில் 330 ரன்களை 187 ஸ்ட்ரைக் ரேட் உடன் குவித்து தற்போது இந்திய அணியில் பினிஷராக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement