ஆசியக்கோப்பை 2023 : விளம்பரத்தின் மூலம் மட்டும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஈட்ட இருக்கும் – வருமானம் எவ்வளவு தெரியுமா?

Asia-Cup
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் மோதும் 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆறு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரினை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் நேரலையில் ஒளிபரப்ப இருக்கிறது.

அதோடு தொலைக்காட்சிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தொடரின் முக்கியமான இந்தியா பாகிஸ்தான் போட்டியானது செப்டம்பர் 2-ஆம் தேதி கண்டி நகரில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான ஒளிபரப்பின் மூலம் மட்டும் பத்து வினாடிக்கு 30 லட்சம் ரூபாய் வரை disney+ hotstar நிறுவனம் வருமானமாக ஈட்ட உள்ளது. அதோடு இந்த தொடரின் மற்ற போட்டிகளுக்கு பத்து வினாடிக்கு மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட இருக்கிறது.

இதன்மூலம் ஹாட் ஸ்டார் நிறுவனமானது இந்த ஆசிய கோப்பை தொடரில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி வருமானமாக ஈட்ட உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்காக 17 ஸ்பான்சர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விளம்பர ஒப்பந்ததாரர்களுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கையொப்பம் இட்டுள்ளது.

- Advertisement -

மேலும் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரையும் அவர்களே ஒளிபரப்பை இருப்பதினால் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு அறிவிப்பையும் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அந்த வகையில் ஆசியக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பை என இரு பெரும் தொடர்களையும் ரசிகர்களின் வசதிக்காக அவர்கள் இலவசமாக ஒளிபரப்ப இருக்கின்றனர்.

இதையும் படிங்க : இப்போல்லாம் இந்தியாவை தெறிக்க விடும் அளவுக்கு வளர்ந்துள்ள பாகிஸ்தானின் வெற்றி ரகசியம் அது தான் – அஸ்வின் ஓப்பன்டாக்

இதன் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதனால் இந்த அதிரடி முடிவை அவர்கள் கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.

Advertisement