இப்போல்லாம் இந்தியாவை தெறிக்க விடும் அளவுக்கு வளர்ந்துள்ள பாகிஸ்தானின் வெற்றி ரகசியம் அது தான் – அஸ்வின் ஓப்பன்டாக்

Ravichandran Ashwin 5
- Advertisement -

2023 ஆசியக் கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு அனைவரிடமும் அதிகப்படியான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக உலக கோப்பையில் காலம் காலமாக வென்று வரும் கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா? என்று இந்திய ரசிகர்களும் இதுவரை சந்தித்த அனைத்து தோல்விகளை நிறுத்தி இம்முறையாவது பாகிஸ்தான் சரித்திரம் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தான் ரசிகர்களிடமும் காணப்படுகிறது. முன்னதாக இவ்விரு அணிகளில் அனுபவம், தரம் என அனைத்து வகையிலும் இந்தியாவுக்கு கொஞ்சமும் சளைக்காத அணியாகவே பாகிஸ்தான் இருந்து வருகிறது.

சொல்லப்போனால் அப்ரிடி, இன்சமாம் போன்ற கடந்த தலைமுறை ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெற்ற பின் சற்று சரிவை சந்தித்த பாகிஸ்தான் அதன் பின் மீண்டெழுந்து 2017 டிராபி ஃபைனலில் இந்தியாவை தெறிக்க விட்டு கோப்பையை வென்றது. அதே போல 2021 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி சரித்திரம் படைத்த பாகிஸ்தான் 2022 ஆசிய கோப்பையிலும் ஃபைனலுக்கு செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பியதில் முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

வெற்றிக்கான ரகசியம்:
அதே போல 2022 ஆசியக் கோப்பை ஃபைனல் வரை சென்ற பாகிஸ்தான் 2022 டி20 உலக கோப்பை ஃபைனல் வரை சென்று சமீப காலங்களில் பெரிய தொடர்களில் நல்ல செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் போனாலும் உலகம் முழுவதிலும் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதே சமீப காலங்களில் அந்த அணியின் எழுச்சிக்கான ரகசியம் என்று ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“பாகிஸ்தான் அணியை நான் திரும்பிப் பார்க்கிறேன். அதாவது கடந்த 5 – 6 வருடங்களுக்கு முன்பாக ஆசிய மற்றும் உலகக் கோப்பை கொண்ட தொடர்களில் அவர்கள் தடுமாறிக் கொண்டிருந்தனர். ஆம் அவர்கள் 1992 உலகக் கோப்பையை வென்று டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதை நான் அறிவேன். இருப்பினும் கடந்த 5 – 6 வருடங்களில் பாகிஸ்தானின் எழுச்சிக்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அதிகமாக பங்காற்றியுள்ளனர்”

- Advertisement -

“மேலும் உள்ளூரில் டேப் பந்தில் விளையாடுவதால் வழக்கம் போல அவர்கள் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி வருகிறார்கள். ஆனால் வெளிநாட்டுத் தொடர்களில் விளையாடுவதே கடந்த 5 – 6 வருடங்களில் பாகிஸ்தான் மறுவளர்ச்சி காண்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக பிஎஸ்எல் தொடரில் விளையாடும் அவர்களுடைய வீரர்கள் பிபிஎல் தொடரின் ஏலத்தில் 60 – 70 பேர் வரை கலந்து கொள்கின்றனர்”

இதையும் படிங்க: எல்லாரும் அழிஞ்சுட்டு வராதா சொல்றாங்க ஆனா அது தான் உண்மையாக நம்மள சோதிக்கிற இடம் – விராட் கோலி பேட்டி

“அது போக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமீரகம், வெஸ்ட் இண்டீஸ் போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெறும் தொடர்களில் அவர்கள் விளையாடுகின்றனர். அதன் காரணமாகவே கடந்த 5 – 6 வருடங்களில் தரமான வீரர்களை உருவாக்குகிறது. அதனாலேயே பாகிஸ்தான் பெரிய தொடர்களில் சிறப்பான செயல்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே பாபர் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தொடர்ந்து அசத்தும் பட்சத்தில் இந்த ஆசிய மற்றும் உலக கோப்பையில் பாகிஸ்தான் அபாயகரமான அணியாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement