- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுயநலமின்றி அடித்து நொறுக்கும் ரோஹித் அப்படியே இதையும் செஞ்சா ஹேப்பியா இருப்போம்.. டிகே விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். 2013இல் தோனி துவக்க வீரராக களமிறக்கியது முதல் அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்தார். அத்துடன் ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அவர் 2019 உலகக் கோப்பையில் மட்டும் 5 சதங்கள் அடித்து வரலாறு படைத்தார்.

அப்படி அதிரடியாக விளையாடும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார். அதைத் தொடர்ந்து 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்.

- Advertisement -

சதமெல்லாம் வேண்டாம்:

அந்த அணுகுமுறையை பின்பற்றி 2023 உலகக் கோப்பையில் ஃபைனல் வரை இந்தியாவை அழைத்துச் சென்ற அவர் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனையும் படைத்தார். அத்துடன் சமீபத்தில் கான்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா அசாத்தியமான வெற்றி பெற்றது. ஆனால் இப்படி அதிரடியாக விளையாடும் ரோஹித் சர்மா உண்மையாகவே இப்போதெல்லாம் தம்முடைய சொந்த ரண்களையும் சாதனைகளையும் மறந்து விட்டார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக துவக்க வீரராக இருக்கும் அவர் 30, 40, 50 ரன்களை அதிரடியாக எடுத்தால் போதும் என்ற வகையில் விளையாடுகிறார். அதனாலேயே இப்போதெல்லாம் ரோகித் சர்மா சதமடிப்பதை பார்ப்பது குறைவாகி விட்டது. இந்நிலையில் சுயநலமற்ற அணுகு முறையில் அசத்தும் ரோகித் சர்மா அப்படியே அவ்வப்போது சதங்களை அடித்தால் தம்மை போன்ற இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைவோம் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

டிகே விருப்பம்:

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா தனது அணுகுமுறையை குறைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர் பெரிய சதம் மற்றும் இரட்டை சதங்கள் அடிக்கும் திறமையை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்ற பசி தற்போதைய ரோஹித் சர்மாவிடம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்”

இதையும் படிங்க: சுனில் நரேனை நொறுக்கிய உலகிலேயே திறமையான பிளேயர்.. ஐசிசி விருது வென்ற ஏபிடிக்கு கோலி வாழ்த்து

“அவரிடம் அந்த திறமை இருக்கிறது. அதை அவர் செய்யும் போது “வாவ் இவரால் எந்த வகையான பவுலிங் அட்டாக்கையும் அடிக்க முடிகிறதே” என்று நமக்குச் சொல்லத் தோன்றும். அவரது பேட்டிங்கை வர்ணனையாளராகவும் சரி வீட்டில் ரசிகராகவும் சரி நான் எப்போதும் மகிழ்ச்சியாக பார்ப்பேன். அவர் மிகவும் ஸ்பெஷல் பிளேயர். எனவே இந்தியாவுக்காக அதிரடி ஓப்பனிங் வீரராக விளையாடும் போது அவர் சில சதங்கள் அடித்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -