IND vs AUS : இந்த சீரிஸ் முழுக்க அவர ஒழுங்கா யூஸ் பண்ணல, ரோஹித் சர்மாவின் முக்கிய கேப்டன்ஷிப் தவறை சுட்டிக்காட்டும் டிகே

Rohit Sharma Dinesh Karthik
- Advertisement -

2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசிப் போட்டியில் வென்றால் தான் ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் இந்தியா விளையாடி வருகிறது.

- Advertisement -

ஆனால் அப்போட்டியில் டாஸ் வென்று ஃபிளாட்டாக இருக்கும் பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா இது வரை 450/8 ரன்கள் குவிக்கும் அளவுக்கு பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டு வரும் இந்தியா இப்போட்டியில் வெற்றிக்காக போராடி வருகிறது. அந்த அணிக்கு டிராவிஸ் ஹெட் 32, மார்னஸ் லபுஸ்ஷேன் 3, ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் தொடக்க வீரர் உஸ்மான் கவஜா சதமடித்து 180 ரன்களும் கேமரூன் க்ரீன் சதமடித்து 114 ரன்களும் எடுத்து மிகப்பெரிய சவாலை கொடுத்தனர்.

சுமாரான கேப்டன்ஷிப்:
முன்னதாக ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த தொடரில் அஷ்வின் – ஜடேஜா ஆகியோர் நிறைய விக்கெட்களை எடுத்த நிலையில் 3வது ஸ்பின்னராக வாய்ப்பு பெற்ற அக்சர் பட்டேல் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் முதல் நாளில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தாலும் அக்சர் படேலை அவரது சொந்த மைதானமான அகமதாபாத் மைதானத்தில் பயன்படுத்திய விதம் சுமாராக இருந்ததாக தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

axar 1

“முதல் நாளில் ஃபீல்டர்களை செட்டப் செய்வதில் ரோகித் சர்மா மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக ஆரம்பத்திலேயே பந்து சுழலாத நிலைமையில் சில்லி பாய்ண்ட், ஷாட் லெக் போன்ற வழக்கமான ஃபீல்டிங்கை அவர் பயன்படுத்தாமல் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தை கொடுத்தார். ஆனால் முதல் மணி நேரத்திற்கு பின் அனைத்து ஃபீல்டர்களையும் அருகே கொண்டு வந்த அவர் 4 விக்கெட்டுகளை எடுத்தார். மிடில் செஷனில் உஸ்மான் கவாஜா – ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அனைத்தையும் கடினமாக்கிய அவர் எளிதாக பவுண்டரிகளை கொடுக்கவில்லை”

- Advertisement -

“ஆனால் அந்த சமயத்தில் அவர் புதிய பந்தை எடுத்தது சரியான முடிவாக அமையவில்லை. அந்த நேரத்தில் அவர் தனது கேப்டன்ஷிப் பற்றி 2 விஷயங்களை திரும்பி பார்க்க வேண்டும். ஒன்று “நான் 9 ஓவர்கள் வந்து வீசியிருக்க வேண்டுமா அல்லது 4 – 5 ஓவர்களா” என்று யோசிக்க வேண்டும். மற்றொன்று இந்த தொடர் முழுவதிலும் அக்சர் பட்டேலை ரோஹித் சர்மா பயன்படுத்திய விதம். ஏனெனில் இந்திய அணியின் தூண்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு தான் அவர் இந்த தொடரில் பெரும்பாலான ஓவர்களை வழங்கினார்”

Dinesh-Karthik-1

“ஆனால் 3வது ஸ்பின்னரான அக்சர் படேல் எங்கே? அவர் எப்போதும் புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசுவதை நாம் பார்த்துள்ளோம். அந்த நிலையில் நீங்கள் புதிய பந்து எடுத்த போது அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். நல்ல பவுன்ஸை கொண்டுள்ள அக்சர் பட்டேலுக்கு தன்னுடைய சொந்த மைதானத்தை பற்றி நன்கு தெரியும். 3 ஸ்பின்னர்கள் இருக்கும் போது கேப்டன்களுக்கு இது போன்ற கடினமான சூழ்நிலைகள் ஏற்படும்”

இதையும் படிங்க:மார்ச் 17 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்கும் தல தளபதி – எதற்கு தெரியுமா?

“ஆனால் பொதுவாக ஸ்பின்னர்கள் அதிக ஓவர்கள் வீசுவார்கள் என்ற நிலைமையில் அக்சர் பட்டேலை அவர் குறைவாகவே பயன்படுத்தினார். நீங்கள் வெற்றி பெறும் போது அது தெரியாது. ஆனால் பின்னடைவை சந்திக்கும் போது இது பெரிய குறையாக தெரியும். இதற்காக ரோஹித்தை நான் குறை சொல்லவில்லை. ஆனால் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த டெஸ்ட் தொடரில் அக்சர் பட்டேல் போன்றவரை பயன்படுத்துவதில் ரோகித் சர்மா சில மாற்றங்களை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement