மார்ச் 17 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்கும் தல தளபதி – எதற்கு தெரியுமா?

Stalin-and-Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நேற்று மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

IND vs AUS

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 17-ஆம் தேதி மும்பையிலும், அதற்கு அடுத்த இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 19-ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறவிருக்கிறது.

அதற்கு அடுத்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நீண்ட மாதங்களாகவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பெவிலியன்கள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை நடைபெற்று வந்ததால் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தன.

stalin 1

அதனைத்தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற இருப்பதினால் ரசிகர்கள் இந்த போட்டியை நேரில் காண ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட புதிய பெவிலியன்களை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியானது வரும் மார்ச் 17-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய பெவிலியன்களை திறந்து வைத்துவிட்டு தமிழக முதலமைச்சர் உரையாற்றவும் இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியும் பங்கேற்க இருக்கிறார்.

இதையும் படிங்க : வீடியோ : 200 ரன்கள் பாட்னர்ஷிப்பை உடைத்தது மட்டுமின்றி ஒரே ஓவரில் 2 விக்கெட்டை சாய்த்த – அஷ்வின்

இந்நிலையில் தோனி பங்கேற்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் தனது ஓய்வு முடிவு குறித்த சில கருத்துக்களையும் அவர் வெளியிடலாம் என்பதனால் இந்த நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement