
இந்திய அணிக்காக கடந்த 2004-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகள், 33 டி20 போட்டிகள் மற்றும் 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக தோனி இருந்ததால் அவ்வப்போது மட்டுமே தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனால் தனக்கென நிரந்தர இடம் இல்லாமல் இருந்து வந்தார்.
இருப்பினும் தனது விடாமுயற்சியால் தொடர்ச்சியாக கடுமையான போராட்டத்தை அளித்து அவ்வப்போது வாய்ப்புகளை பெற்று வந்த தினேஷ் கார்த்திக் ஒரு அற்புதமான வீரராகவே இதுவரை இருந்து வருகிறார். கடைசியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடி இருந்த அவர் அதன் பின்னர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வந்தார்.
ஆனால் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் நிச்சயம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய t20 அணியில் இடம் பிடிப்பதே என்னுடைய இலக்கு என்று தெரிவித்திருந்தார். அந்த வகையில் நடப்பு தொடரில் ஒரு பினிஷராக தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பிடித்துள்ளார்.
சீனியர் வீரர்கள் பலரும் ஓய்வு பெற்றிருக்கும் வேளையில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் விளையாட தேர்வு செய்யப்பட்ட அவர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2008 முதல் 2022 வரை புள்ளிபட்டியலில் கடைசி இடம் பிடித்த அணிகளின் மொத்த பட்டியல்
நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 191 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 287 ரன்களை விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு முன்பு இருந்ததை காட்டிலும் களத்தில் கூடுதல் சுறுசுறுப்பாக இருக்கும் தினேஷ் கார்த்திக் களமிறங்கும் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டி வருகிறார்.