ஐபிஎல் 2008 முதல் 2022 வரை புள்ளிபட்டியலில் கடைசி இடம் பிடித்த அணிகளின் மொத்த பட்டியல்

- Advertisement -

ஐபிஎல் போன்ற எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலுமே பங்கேற்கும் அத்தனை அணிகளும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமென்ற இலக்குடனே களமிறங்குகின்றன. அதில் சிறப்பாக செயல்படும் அணிகள் மட்டுமே அதிலும் நாக் அவுட் போட்டிகளிலும் அழுத்தத்தை தாங்கிப் தைரியமாக அசத்தலாக செயல்படும் அணிகளே வெற்றி வாகை சூடுகின்றன. மேலும் எந்த ஒரு தொடரிலும் நாக் அவுட் சுற்றுக்கு சென்று வெற்றிக் கோப்பையை முத்தமிட முதலில் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. அதிலும் ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த கடினமான தொடரில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதே பெரும்பாலான அணிகளுக்கு சிம்ம சொப்பனமாகும்.

IPL 2022 (2)

- Advertisement -

லீக் சுற்றில் குறைந்தது பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி அவசியம் என்ற சூழ்நிலையில் ஒரு சில அணிகள் அபாரமாக செயல்பட்டு தொடர் வெற்றிகளால் புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களை அசால்டாக பிடித்து விடும். ஆனால் ஒருசில அணிகள் நட்சத்திர வீரர்கள் இருந்தும் கூட ஆரம்பம் முதலே மோசமாக செயல்பட்டு யாருமே விரும்பாத கடைசி இடங்களை பிடிக்க வேண்டிய பரிதாப சூழ்நிலை ஏற்படும்.

ஐபிஎல் போன்ற தனியார் தொடரில் ஏலத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்யாமல் விடுவது, பல கோடி ரூபாய் செலவழித்து நம்பி வாங்கப்பட்ட நட்சத்திர வீரர் சிறப்பாக செயல்பட தவறுவது போன்ற அம்சங்களே அதுபோன்ற நிலைமைக்கு வித்திடுகிறது. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் சுமாராக செயல்பட்டு கடைசி இடங்களை பிடித்த அணிகளை பற்றி பார்ப்போம்:

Rohit Sharma Deccan Chargers

1. ஹைதெராபாத்: 8 அணிகளுடன் 2008இல் தொடங்கப்பட்ட வரலாற்றின் முதல் ஐபிஎல் தொடரில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையில் களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் தேவையான அளவு நட்சத்திர வீரர்கள் இருந்தபோதிலும் ஆரம்பம் முதலே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து மொத்தம் 14 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்று 12 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அதன் காரணமாக விவிஎஸ் லக்ஷ்மன் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் 7-வது இடம் பிடித்த பெங்களூரு 4 வெற்றிகளைப் பெற்றது.

- Advertisement -

2. கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐபிஎல் 2009 தொடரில் கங்குலி தலைமையில் மிரட்டும் என எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா 14 போட்டிகளில் 10 தோல்விகள் 3 வெற்றிகளுடன் கடைசி இடத்தை பிடித்தது, 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 7-வது இடத்தை பிடித்த சச்சின் தலைமையிலான மும்பை 5 வெற்றிகளைப் பெற்றது.

Ganguly 1

3. பஞ்சாப்: 2010 ஐபிஎல் தொடரில் சங்ககாரா தலைமையில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 10 தோல்விகளையும் பெற்று கடைசி இடத்தை பிடித்தது. 7-வது இடம் பிடித்த ராஜஸ்தான் 6 வெற்றிகளைப் பெற்றது.

- Advertisement -

4. டெல்லி: அபரீத வளர்ச்சியால் 10 அணிகளுடன் நடைபெற்ற 2011 ஐபிஎல் தொடரில் வீரேந்திர சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் பங்கேற்ற 14 போட்டிகளில் 4 வெற்றி தோல்விகளை சந்தித்து 10-வது இடத்தை பிடித்தது. 9-வது இடத்தைப் பிடித்த புனே வாரியர்ஸ் அதே 10 தோல்விகளை பெற்றாலும் கூடுதல் ரன்ரேட் காரணமாக எஸ்கேப் ஆனது.

Ganguly

5. புனே: 2012 சீசனில் கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா அணி கலைக்கப்பட்டதால் 9 அணிகள் பங்கேற்ற அந்த வருடம் ஒரு அணி 16 போட்டிகளில் பங்கேற்ற நிலையில் கங்குலி தலைமை வகித்த புனே வாரியர்ஸ் 4 வெற்றிகளையும் 12 தோல்விகளையும் சந்தித்து 2011இல் விலகிப் போன கடைசி இடத்தை அணைத்துக் கொண்டது. 9-வது இடத்தைப் பிடித்த கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் 4 வெற்றி 11 தோல்வி அடைந்தாலும் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டதால் தப்பியது.

- Advertisement -

6. டெல்லி: ஐபிஎல் 2013 தொடரில் மீண்டும் 9 அணிகள் தலா 16 போட்டிகளில் பங்கேற்ற நிலையில் மகிளா ஜெயவர்தனே தலைமை வகித்த டெல்லி டேர்டெவில்ஸ் பங்கேற்ற 16 போட்டிகளில் 3 வெற்றியும் 13 தோல்விகளையும் பதிவு செய்து கடைசி இடத்தை 2011க்கு பின் மீண்டும் பிடித்தது. 4 வெற்றிகளை பெற்ற புனே 9-வது இடம் பிடித்தது.

delhi

7. டெல்லி: 2014இல் புனே அணி கலைக்கப்பட்டதால் மீண்டும் 8 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடரில் மீண்டும் சொதப்பிய டெல்லி டேர்டெவில்ஸ் 14 போட்டிகளில் 2 வெற்றியும் 12 தோல்விகளையும் சந்தித்து மீண்டும் கடைசி இடம் பிடித்தது. 5 வெற்றிகளைப் பெற்ற பெங்களூரு 7-வது இடம் பிடித்தது.

8. பஞ்சாப்: ஜார்ஜ் பெய்லி தலைமையில் முந்தைய சீசனில் பைனல் வரை சென்ற பஞ்சாப் 2015இல் அதற்கு நேர்மாறாக 14 போட்டிகளில் 3 வெற்றியும் 11 தோல்விகளையும் பெற்று 2010க்கு பின் மீண்டும் கடைசி இடத்தை பிடித்தது. இம்முறை ஓரளவு அசத்திய டெல்லி 5 வெற்றிகளைப் பெற்று 7-வது இடம் பிடித்தது.

baily

9. பஞ்சாப்: 2016இல் சென்னை மற்றும் ராஜஸ்தான் தடை பெற்றதால் புதிதாக புனே மற்றும் குஜராத் பங்கேற்ற நிலையில் மீண்டும் சொதப்பிய பஞ்சாப் 14 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 10 தோல்விகளையும் பதிவு செய்து 3-வது முறையாக கடைசி இடம் பிடித்தது. 7-வது இடம் பிடித்த டோனி தலைமையிலான புனே 5 வெற்றிகளைப் பெற்றது.

10. பெங்களூரு: முந்தைய சீசனில் ஃபைனல் வரை வென்று கோப்பையை கோட்டை விட்ட விராட் கோலி தலைமையிலான பெங்களூரு 2017இல் அப்படியே தலைகீழாக பங்கேற்ற 14 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று 10 தோல்விகளை சந்தித்து கடைசி இடம் பிடித்தது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 7-வது இடத்தை பிடித்த சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் 4 வெற்றிகளை பெற்றது.

rcb

11. டெல்லி: 2018 சீசனில் சென்னை மற்றும் ராஜஸ்தான் தடையிலிருந்து திரும்பி மீண்டும் பங்கேற்ற நிலையில் கடைசி முறையாக டேர்டெவில்ஸ் என்ற பெயருடன் களமிறங்கிய டெல்லி 14 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 9 தோல்விகளின் பதிவு செய்து 4-வது முறையாக கடைசி இடத்தை பிடித்தது. 6 வெற்றிகளைப் பெற்ற பஞ்சாப் 7-வது இடம் பிடித்தது.

12. பெங்களூரு: 2019 சீசனில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு 14 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 8 தோல்விகளையும் பதிவு செய்து 2017-க்கு பின் மீண்டும் கடைசி இடம் பிடித்தது. 7-வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் அதே 8 தோல்விகளை பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் கிரேட் எஸ்கேப் ஆனது.

RR

13. ராஜஸ்தான்: முந்தைய சீசனில் எஸ்கேப் ஆன ராஜஸ்தான் 2020 சீசனில் 14 போட்டிகளில் 6 வெற்றியும் 8 தோல்விகளையும் பதிவு செய்து தவறவிட்ட கடைசி இடத்தை வலுவாக அணைத்துக் கொண்டது. ஆனால் இம்முறை அதே 8 தோல்விகளை பதிவு செய்த டோனி தலைமையிலான சென்னை ரன் ரேட் புண்ணியத்தால் 7-வது இடத்தைப் பிடித்து எஸ்கேப் ஆனது.

14. ஹைதராபாத்: 2021 சீசனில் டேவிட் வார்னரை நன்றியற்று பாதியிலே கழற்றிவிட்ட ஹைதராபாத் அதற்கான பலனை அனுபவிக்கும் வகையில் பங்கேற்ற 14 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 11 தோல்விகளையும் பதிவு செய்து கடைசி இடத்தை பிடித்தது. 7-வது இடம்பிடித்த ராஜஸ்தான் 5 வெற்றிகளைப் பெற்றது.

MI Mumbai Indians

15.மும்பை: இந்த வருடம் வெற்றிகரமான ஐபிஎல் அணி என சாதனை படைத்த மும்பை யாருமே எதிர்பாரா வகையில் வரலாற்றிலேயே முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்த அணியாக மோசமான சாதனை படைத்து மொத்தமாக பங்கேற்ற 14 போட்டிகளில் 4 வெற்றி 10 தோல்விகளை பதிவு செய்து கடைசி இடம் பிடித்தது. இம்முறையும் அதே 10 தோல்விகளை பெற்ற தோனி தலைமையிலான சென்னை ரன்ரேட் அடிப்படையில் எஸ்கேப் ஆகி வரலாற்றில் கடைசி இடத்தை பிடிக்காத ஒரே அணியாக சாதனை படைத்தது.

Advertisement