தம்பி நீ 5 நோபால் போட்டதுக்கு காரணமே இதுதான். இப்போவாது புரிஞ்சிக்கோ – தினேஷ் கார்த்திக் கருத்து

Dinesh-Karthik-and-Arshdeep
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சந்தித்திருந்த வேளையில் நேற்று புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதலாவது டி20 போட்டியில் இடம் பெறவில்லை. ஆனால் நேற்றைய இரண்டாவது போட்டியின் போது அவர் மீண்டும் அணிக்கு திரும்பியிருந்தார். இந்த போட்டியின் போது சிறப்பாக பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக வழக்கமாக ரன்களை கச்சிதமாக விட்டுக்கொடுத்து அற்புதமாக பந்துவீசும் அவர் நேற்றைய போட்டியில் இரண்டு ஓவர்களை மட்டுமே வீசி 18.50 ரன்கள் சராசரியுடன் 37 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிலும் குறிப்பாக தொடர்ச்சியாக மூன்று நோபால்களை வீசியதோடு மட்டுமின்றி மொத்தமாக 5 நோ பால்களை வீசியிருந்தார். அவரது இந்த மோசமான செயல்பாடு அனைவரது மத்தியிலும் தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 21 போட்டியில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதேவேளையில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 12 நோ பால்களை அவர் வீசி உள்ளது தற்போது மோசமான புள்ளி விவரமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் 5 நோ பால்களை வீசியதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் அர்ஷ்தீப் சிங் குறித்து ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : அர்ஷ்தீப் சிங்கை நினைத்தால் உண்மையில் வருத்தமாகவே உள்ளது. அவர் இந்த போட்டியில் நோ பால்களை வீசக் காரணம் மேட்ச் ப்ராக்டிஸ் இல்லாதது என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டும் இன்றி இது எளிதான ஒரு விடயம் கிடையாது என்றும் அவரது நோ பால் சர்ச்சை குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs SL : அயர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி படுமோசமான சாதனையை படைத்த – இந்திய அணி

இந்த இலங்கை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்ட அவர் அதிக பயிற்சி இல்லாமல் நேரடியாக இரண்டாவது போட்டியில் களமிறங்கியதே இப்படி தொடர்ச்சியாக அவர் நோ பால் காரணமாக அமைந்தது என்றும் தொடர்ச்சியாக அவர் பயிற்சியை மேற்கொண்டு தனது ரிதத்தை பிடிக்க வேண்டும் என்பதுமே அனைவரது விருப்பமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement