IND vs SL : அயர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி படுமோசமான சாதனையை படைத்த – இந்திய அணி

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஆட்டத்தில் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் அசத்தலான த்ரில் வெற்றியை பெற்ற இந்திய அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

IND vs SL

- Advertisement -

ஆனால் நேற்று நடைபெற்ற முக்கியமான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது இந்திய அணியில் மோசமான பந்துவீச்சை சாதகப்படுத்திக்கொண்டு துவக்கத்திலிருந்து இறுதி ஓவர் வரை அதிரடியாக விளையாடியது. முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது.

Arshdeep Singh

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த சாதனை யாதெனில் : இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 5 நோ பால்களை வீசி ஒரே போட்டியில் அதிக நோ பால் வீசிய அணியாக அயர்லாந்து முதலிடத்தில் இருந்தது.

இதையும் படிங்க : வீடியோ : உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாவதற்காக தார் ரோட்டை அவர் தான் போட சொல்கிறாரா? சைமன் டௌல் நேரடி கேள்வி

ஆனால் நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 நோ பால்களை வீசி ஒரே போட்டியில் அதிக நோ பால்களை வீசிய அணி என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement