வீடியோ : உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாவதற்காக தார் ரோட்டை அவர் தான் போட சொல்கிறாரா? சைமன் டௌல் நேரடி கேள்வி

Simon Doull Babar azam
Advertisement

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதல் போட்டியை தோல்வியிலிருந்து தப்பி கடைசி நேரத்தில் டிரா செய்தது. அந்த நிலைமையில் ஜனவரி 2வது தேதியன்று துவங்கிய 2வது போட்டியிலும் ஆரம்பம் முதலே திண்டாடி வரும் அந்த அணி 4வது நாள் முடிவில் 319 ரன்களை துரத்தும் போது அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 0/2 என திண்டாடி வருகிறது. அதனால் இப்போட்டியில் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோயுள்ள நிலையில் டிரா செய்வதற்கும் கடுமையாக போராட வேண்டியுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் தொடரை இழந்த பாகிஸ்தான் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் தோற்று அவமானத்தை சந்தித்த அந்த அணி உலக அளவில் விமர்சனங்களை சந்தித்தது. அதை விட ஆஸ்திரேலிய தொடரில் தார் ரோடு போலிருந்த ராவில்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா 500+ ரன்கள் அடித்த நிலையில் அதே மைதானத்தில் இங்கிலாந்து 600+ ரன்கள் தெறிக்க விட்டது.

- Advertisement -

பின்னணியில் யார்:
அதனால் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றுக்கு சமமில்லாமல் தார்ரோடு போல இருந்த அந்த மைதானத்தை ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து கலாய்த்து தள்ளியது. மேலும் ராவில்பிண்டி மைதானம் சராசரிக்கும் குறைவாக இருந்தது என ஒரே வருடத்தில் 2 முறை அடுத்தடுத்த கருப்பு புள்ளிகளை கொடுத்த ஐசிசி தண்டனை வழங்கியது. அந்த நிலைமையில் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டி நடைபெறும் கராச்சி மைதானமும் தார் ரோடு போலவே இருந்ததை கத்துக்குட்டி ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியமும் ஏராளமான ரசிகர்களும் கலாய்த்து வருகிறார்கள்.

Pakistan

குறிப்பாக தற்போது சுமாரான பார்மில் இருக்கும் பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களைக் குவித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உருவெடுப்பதற்காக பாகிஸ்தான் வாரியம் வேண்டுமென்றே இது போன்ற தார் ரோடுகளை அமைத்துள்ளதாக ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள். ஆனால் எதிரணியும் அதில் அடிப்பார்கள் என்பதை பாகிஸ்தான் வாரியமும் மைதானமும் மறந்து விட்டது. ஏனெனில் அந்த உள்நோகத்தில் பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை விட எதிரணி தான் அந்த அணியை சரமாரியாக அடித்து நொறுக்கி வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் தன்னுடைய புள்ளி விவரங்களையும் சாதனைகளையும் உயர்த்துவதற்காக பாபர் அசாம் தான் இது போன்ற தார் ரோடு பிட்ச்களை அமைக்குமாறு பின்னணியில் சொல்கிறாரா என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் நேரடியாக விமர்சித்துள்ளார். இது பற்றி இத்தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் நேரலையில் பேசியது பின்வருமாறு. “இதற்கான உத்தரவுகள் எங்கிருந்து வருகிறது? அது பாபர் அசாமிடமிருந்து வருகிறதா? அவர் இது போன்ற தார் ரோடுகளில் விளையாடி தன்னுடைய புள்ளி விவரங்களை உயர்த்த விரும்புகிறாரா”

“அப்படியானால் அது மிகவும் தவறான அணுகுமுறையாகும். முதலில் மைதான பராமரிப்பாளர்கள் அவர்களுடைய வேலையை சுதந்திரமாக செய்ய விடுங்கள். மேலிடத்தில் இருப்பவர்கள் தயவு செய்து இதில் மூக்கை நுழைக்காமல் இருங்கள். ஏனெனில் இந்த மைதானங்களில் எதுவுமே கிடைக்கவில்லை. இதில் புற்கள் இல்லை வேகமும் இல்லை பவுன்ஸ் இல்லை. நீங்கள் இப்போட்டியில் உள்ளூர் தொடரில் அசத்திய ஹம்சாவுக்கு அறிமுகமாக வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள்”

இதையும் படிங்க:IND vs SL : இந்திய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றிக்கு காரணமே இதுதான் – ஷனகா மகிழ்ச்சி

“ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு வரும் அவர் இது போன்ற தார் ரோட்டில் பந்து வீசுகிறார். அதனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதை போல் இங்கும் அவர் அசத்துவார் என்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது. அதே சமயம் உள்ளூர் கிரிக்கெட்டிலும் இது போன்ற மைதானங்களை உருவாக்காமல் தரமான மைதானங்களை உருவாக்குங்கள்” என்று கூறினார்.

Advertisement