IND vs SL : இந்திய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றிக்கு காரணமே இதுதான் – ஷனகா மகிழ்ச்சி

Shanaka
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது புனே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது.

IND vs SL

- Advertisement -

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே இஷான் கிஷன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஹார்டிக் பாண்டியா, தீபக் ஹூடா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் இலங்கை அணியிடம் எளிதாக வீழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரது அதிரடி காரணமாக ஓரளவு இந்திய அணி சரிவில் இருந்து மீண்டதோடு இறுதியில் 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு கவுரவமான தோல்வியை சந்தித்தது.

SHivam mavi IND vs SL

இந்த போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது மட்டுமின்றி எக்ஸ்ட்ராஸ் என்கிற உதிரி பந்துகளையும் அதிகமாக வீசினர். அதோடு பேட்டிங்கில் டாப் ஆர்டரில் ரன்கள் வராததால் பின்வரிசையில் ரன்கள் வந்தாலும் இந்திய அணியால் இலக்கை எட்ட முடியாமல் போனது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் அனைத்து விடயங்களும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. துவக்க வீரர்கள் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததால் மிடில் ஆர்டரில் எங்களால் சிறப்பாக விளையாட முடிந்தது. அதேபோன்று மிடில் ஆர்டரிலும் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்த வேளையில் பினிஷர்களும் சரியாக பினிஷிங் செய்து கொடுக்க முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்களும் சிறப்பாக விளையாடினர்.

இதையும் படிங்க : IND vs SL : பேட்டிங், பவுலிங் ரெண்டிலுமே தப்பு நடந்துச்சு. தோல்விக்கு பிறகு – கேப்டன் பாண்டியா பேசியது என்ன?

ஒரு கட்டத்தில் அவர்கள் 5 விக்கெட்டுகளை இழந்த போதும் மீண்டும் ரன்களை குவிக்க துவங்கி விட்டனர். இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்தியா போன்ற ஒரு பெரிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்துவது என்பது சற்று சவாலான ஒன்றுதான் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement