IND vs SL : பேட்டிங், பவுலிங் ரெண்டிலுமே தப்பு நடந்துச்சு. தோல்விக்கு பிறகு – கேப்டன் பாண்டியா பேசியது என்ன?

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று புனே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஷனகா 56 ரன்களையும், துவக்க வீரர் குசால் மென்டிஸ் 52 ரன்களையும் குவித்து அசத்தினர்.

IND vs SL

- Advertisement -

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து படுமோசமான சறுக்கலை சந்தித்தது. மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ், அக்சர் படேல் மட்டும் இல்லையென்றால் இன்னும் படுமோசமான சறுக்கலை இந்த போட்டியில் சந்தித்திருக்கும்.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் முடிவில் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலை வைக்கின்றன.

IND vs SL Axar PAtel

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே பவர்பிளே ஓவர்கள் என்பது எங்களுக்கு மோசமாக அமைந்தது. அடிப்படையான தவறுகளை இந்த போட்டியில் நிறைய செய்து விட்டோம்.

- Advertisement -

இதுபோன்ற உச்ச லெவலில் நாம் விளையாடும் போது இதுபோன்ற அடிப்படை தவறுகள் நடைபெறக்கூடாது. போட்டியின் போது ஒரு நாள் நமக்கு மோசமானதாக அமையலாம், முடிவுகள் மாறலாம். ஆனால் நமது அடிப்படை திறன்களில் இருந்து மாற்றம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : PAK vs NZ : கடைசி நேரத்தில் அடுத்தடுத்த டக், தோல்வியை தவிர்க்கவே திண்டாடும் பாகிஸ்தான் – அவமானத்தை தவிர்க்குமா

அதே போன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் நோபால் வீசுவது என்பது ஒரு க்ரைம். அதுவும் இந்த போட்டியில் நடைபெற்று விட்டது. சூரியகுமார் யாதவ் இந்த போட்டியில் மிக அற்புதமாக நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடினார் என ஹார்டிக் பாண்டியா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement