PAK vs NZ : கடைசி நேரத்தில் அடுத்தடுத்த டக், தோல்வியை தவிர்க்கவே திண்டாடும் பாகிஸ்தான் – அவமானத்தை தவிர்க்குமா

PAK vs NZ
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதல் போட்டியில் சந்திக்க வேண்டிய தோல்வியிலிருந்து கடைசி நாளில் போதிய வெளிச்சமின்மையால் தப்பி டிரா செய்தது. மேலும் கடந்த வருடம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக சந்தித்த அடுத்த தொடர் தோல்விகளால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள அந்த அணி இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த நிலைமையில் ஜனவரி 2ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தார் ரோடு போலிருந்த பிட்ச்சில் சுமாராக பந்து வீசிய பாகிஸ்தானை சிறப்பாக எதிர்கொண்டு 449 ரன்கள் சேர்த்தது.

Devon Conway Pak vs nz

- Advertisement -

அந்த அணிக்கு 134 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டாம் லாதம் 71 ரன்களும் டேவோன் கான்வே சதமடித்து 122 ரன்களும் குவிக்க மிடில் ஆர்டரில் கேன் வில்லியம்சன் 36, ஹென்றி நிக்கோலஸ் 26, டார்ல் மிட்சேல் 3, டாம் ப்ளெண்டல் 51, மைக்கேல் பிரேஸ்வெல் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் 10வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தொல்லை கொடுத்த மாட் ஹென்றி 68* ரன்களும் அஜஸ் பட்டேல் 35 ரன்களும் குவித்து நியூசிலாந்துக்கு திருப்பு முனையை ஏற்படுத்தினார்கள்.

திண்டாடும் பாகிஸ்தான்:
அப்படி டெயில் எண்டர்கள் பதம் பார்க்கும் அளவுக்கு சுமாராக பந்து வீசிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் எவ்வளவோ போராடியும் முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அப்துல்லா சபிக் 19, ஷான் மசூட் 20, பாபர் அசாம் 24 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 83 ரன்கள் குவித்தார்.

அவருடன் மிடில் ஆர்டரில் 5வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய சர்ப்ராஸ் அகமது 78 ரன்களில் அவுட்டான நிலையில் சவுத் ஷாகீல் அதிகபட்சமாக சதமடித்து 125* ரன்கள் விளாசி அவுட்டாகாமல் நின்றார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் மற்றும் இஷ் சோதி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 41 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய நியூஸிலாந்து தனது 2வது இன்னிங்ஸை 227/5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

அந்த அணிக்கு டேவோன் கான்வே 0, ஹென்றி நிகோலஸ் 5 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் டாம் லாதம் 62, கேன் வில்லியம்சன் 41, டாம் ப்ளண்டல் 74 என இதர பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை குவித்தனர். அதைத்தொடர்ந்து 4வது நாள் மாலை நேரத்தில் 319 என்ற பெரிய இலக்கை துரத்துவதற்கு களமிறங்கிய பாகிஸ்தானுக்கு நங்கூரமாக நிற்க வேண்டிய தொடக்க வீரர் சபிக் டக் அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஹம்சாவும் டக் அவுட்டாகி சென்றார்.

அப்படி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த டக் அவுட்டாகி அதிர்ச்சியை சந்தித்த பாகிஸ்தான் 4வது நாள் முடிவில் 0/2 என படு மோசமான நிலையில் திண்டாடி வருகிறது. குறிப்பாக வெற்றி பெற இன்னும் 319 ரன்கள் தேவைப்படும் நிலையில் கைவசம் 8 மட்டுமே இருப்பதால் இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 99% இல்லை என்றே சொல்லலாம். சொல்லப்போனால் தற்சமயத்தில் அந்த அணி இருக்கும் ஃபார்முக்கு தோல்வி நிச்சயம் என்ற நிலைமையில் அதை தவிர்த்து டிரா செய்து சொந்த மண்ணில் அவமானத்தை தவிர்க்க கடைசி நாளில் கடுமையாக போராட வேண்டியுள்ளது.

இதையும் படிங்கIND vs SL : சரிந்த இந்தியாவை சிங்கமாய் காப்பாற்ற போராடிய அக்சர் படேல் – சூரியகுமார், தோல்விக்கான காரணங்கள் இதோ

மறுபுறம் முதல் நாளிலிருந்தே அட்டகாசமாக செயல்பட்டு வரும் நியூசிலாந்து நிச்சயமாக கடைசி நாளிலும் எளிதாக பாகிஸ்தானின் 8 விக்கெட்டுகளை சாய்த்து இப்போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. முன்னதாக அதிரடியாக விளையாடிய இங்கிலாந்திடம் தான் சொந்த மண்ணில் கொஞ்சமும் போராடாமல் பாகிஸ்தான் தோற்றது என்றால் நிதானமாக விளையாடும் நியூசிலாந்திடமும் மண்ணை கவ்வி வருவதை பார்க்கும் ரசிகர்கள் நீங்கள் எதற்குமே சரிப்பட்டு வர மாட்டீர்கள் என்று வழக்கம் போல சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

Advertisement