
சமீபகாலமாகவே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் குறித்தே பேச்சுகள் அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றன. ஏனெனில் கடந்த நான்கு ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 17 சதங்களை விளாசியுள்ள ஜோ ரூட் தற்போதைய வீரர்களில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரராக இருக்கிறார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையும் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் ஜோ ரூட் இருக்கிறார்.
அதனால் அவரே சிறந்த வீரர் என்று பலரும் கூறி வருகின்றனர். அதே வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதால் அவரையும் மிகச்சிறந்த வீரர் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இரண்டு வீரர்களில் தனக்கு பிடித்த வீரர் யார்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஒரு பக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்கும் போது ஜோ ரூட் சிறப்பான வீரராக உங்களுக்கு தெரியலாம்.
ஆனால் விராட் கோலியை எடுத்துக் கொண்டால் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி விளையாட கூடியவர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் எண்களை வைத்து பார்த்தால் ஜோ ரூட் தற்போது விராட் கோலியை முந்தி இருக்கலாம். ஆனால் விராட் கோலி போன்று ஒரு தரமான இருக்க முடியாது என்று என் இதயம் சொல்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக நான் விராட் கோலியுடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். ஒரு பெரிய போட்டி, ஒரு பெரிய தொடர் என்றால் அவர் எவ்வளவு ஈடுபாட்டுடனும், ஆர்வத்தோடும் தயாராவார் என்பதை அருகில் இருந்து பார்த்த எனக்கு நன்றாக தெரியும். ஒரு முறை யாராவது அவரது பேட்டிங் திறமையை குறித்து பேசி விட்டால் நிச்சயம் அவர் உங்களுக்கு எதிராக கடுமையாக திரும்பி வருவார்.
இதையும் படிங்க : அவரை மாதிரி தங்கமான ஒருத்தரை பாக்கவே முடியாது.. சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்த – முன்னாள் பாக் வீரர்
ஒருமுறை அவரை சீண்டி விட்டால் இரண்டு மடங்காக ரன்களை குவிக்கும் திறன் உடையவர். என் வாழ்நாள் முழுவதும் நான் ஒருவருடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்றால் அது விராட் கோலி தான் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.