பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சயீத் அஜ்மல் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 35 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 178 விக்கெட்களையும், 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 184 விக்கெட்டுகளையும், 64 டி20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியவர். அவரது கரியரில் பல சிறப்பான வெற்றிகளிலும் இடம்பெற்றிருந்தார்.
சச்சின் தங்கமான மனசுக்காரர் :
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக தரமான சுழற்பந்து வீச்சாளராக இருந்த அவரது பவுலிங் ஆக்சன் மீது சில சர்ச்சைகள் இருந்ததால் அவர் பாகிஸ்தான அணியில் இருந்து மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டார்.
இருப்பினும் அவர் இருந்தவரை அந்த அணிக்காக மிகச்சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தான் விளையாடியதிலேயே நல்ல கிரிக்கெட்டர் என்றால் அது சச்சின் தான் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
கிரிக்கெட் வரலாற்றிலேயே சச்சின் டெண்டுல்கரை போன்ற ஜாம்பவான் வீரரை பார்ப்பது அரிதான விடயம். உலகிலேயே நல்ல குணம் கொண்ட ஒரு மனிதரும் அவர்தான். எனவே தான் நான் அவரை எப்போதும் சார் என்று அழைப்பேன். அவர் அந்த வார்த்தைக்கு தகுதியான ஒரு வீரர் அவர்தான் என்பதையும் நான் நம்புகிறேன்.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அவரது விக்கெட்டை வீழ்த்தியதை நான் மறக்கவே மாட்டேன். அந்த நினைவுகளை பசுமையாக இன்றும் வைத்திருக்கிறேன். அதேபோன்று நான் அவருடன் சேர்ந்து ஒரு போட்டியில் விளையாடியிருக்கிறேன்.
இதையும் படிங்க : இன்னும் ஒரு சதம் போதும்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாதனை நிகழ்த்தப்போகும் ரோஹித் சர்மா
அப்போது அவர் எனக்கு கேப்டனாக இருந்து என்னை ஆதரித்து சிறப்பாக செயல்பட வைத்தார் என சச்சின் டெண்டுல்கர் குறித்து செய்த சயீத் அஜ்மல் புகழ்ந்து பேசியுள்ளார். இப்படி பாகிஸ்தான் வீரர் ஒருவர் இந்திய ஜாம்பவான் சச்சினை பாராட்டி பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.



