இன்னும் ஒரு சதம் போதும்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாதனை நிகழ்த்தப்போகும் ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் மற்றும் பேச்சு போட்டிக்கான அணியின் கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சாதனை நிகழ்த்தப்போகும் ரோஹித் சர்மா :

இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரோகித் சர்மா எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை குறி வைத்து தயாராகி வருகிறார். டி20 உலக கோப்பை வென்ற ரோஹித் சர்மா அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் எதிர்வரும் இந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மேலும் ஒரு சதத்தை அடிக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 10 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஜோ ரூட் அதிகபட்சமாக 16 சதங்களையும் அதற்கடுத்து மார்னஸ் லாபுஷேன் 11 சதங்களையும் அடித்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அதேபோன்று கேன் வில்லியம்சன் 10 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : தோனியின் 20 வருட சாதனையை சமன் செய்த துருவ் ஜுரேல்.. கவாஸ்கரின் கணிப்பை உண்மையாக்கி அசத்தல்

இந்நிலையில் ரோகித் சர்மாவும் மேலும் ஒரு சதத்தை அடிக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 10 சதங்களை அடித்த நான்காவது வீரர் என்ற சாதனையும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைக்க காத்திருக்கிறார். இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் தலா 5 சதங்கள் அடித்து ரோகித்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement