டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினோட இடத்தை அவர்தான் பிடிப்பார்னு நெனச்சேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் கொல்கத்தாவில் விளையாடினார். அந்த டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறிய சச்சின் அதோடு தனது கிரிக்கெட் பயணத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார்.

Sachin Tendulkar

- Advertisement -

சச்சினுக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் விராட் கோலி அந்த பணியை தற்போது செவ்வனவே செய்து வருகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் இடத்தை நிரப்ப இருந்தது ரோகித் சர்மா தான் என்று தினேஷ் கார்த்திக் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

ரோகித் சர்மா அறிமுகமான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே சதம் அடித்து அசத்தியிருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் 177 ரன்கள் குவித்த ரோகித் சர்மா அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த 14-வது இந்திய வீரராக சாதனை படைத்தார். அதுமட்டும் இன்றி இரண்டாவது போட்டியிலும் 111 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

rohith 6

இந்நிலையில் இதுகுறித்து பேசியிருந்த தினேஷ் கார்த்திக் கூறுகையில் : முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலேயே இப்படி இரண்டு சதங்கள் அடிப்பதெல்லாம் பெரிய விஷயம் எனவே சச்சின் இல்லாத இடத்திற்கு ரோகித் சர்மா தான் பதிலாக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் வாழ்க்கையும் விளையாட்டும் நீங்கள் நினைப்பது போல் இருக்காது.

- Advertisement -

ரோகித்தின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வளைவான பந்துகள் வீசப்பட்டன. அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தாமதமான உயர்வையை பெற்றுள்ளார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அவர் கூறியது போலவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டக்காரராக ஏகப்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த அளவிலேயே விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க : அப்போ உள்ளூர் செயல்பாடுகள் வேஸ்டா – அடுத்த சஞ்சு சாம்சனாக பெஞ்சில் அமர வைக்கப்பட்ட இளம்வீரர்

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமாகி இருந்தாலும் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து தான் நிரந்தர இடம் பிடித்து விளையாடி வருகிறார்/ இதுவரை இந்திய அணிக்காக 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் 3,137 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement