அப்போ உள்ளூர் செயல்பாடுகள் வேஸ்டா – அடுத்த சஞ்சு சாம்சனாக பெஞ்சில் அமர வைக்கப்பட்ட இளம்வீரர்

IND vs WI 5th T0I
- Advertisement -

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தலைநகர் ஹராரேயில் ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி மதியம் 12.45 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வேவுக்கு நீண்ட நாட்கள் கழித்து காயத்திலிருந்து திரும்பிய தீபக் சஹர் கயா 4, மருமணி 8, மாதேவரே 5 என 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தார்.

அதனால் 31/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் வந்த சீன் வில்லியம்ஸ் 1, சிகந்தர் ராசா 12, ரியன் புர்ள் 11, ஜோங்வே 13 என முக்கிய வீரர்களும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 100 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு கேப்டன் சகப்வா 35 ரன்களும் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓரளவு காப்பாற்றிய ங்கரவா 34 ரன்களும் எவன்ஸ் 33* ரன்கள் எடுத்த போதிலும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

ருதுராஜ்க்கு வாய்ப்பில்லை:
இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக தீபக் சஹர், அக்சர் படேல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 190 என்ற சுலபமான இலக்கை இந்தியாவுக்கு தவான் 81* (113) ரன்களும் கில் 82* (72) ரன்களும் எடுத்து 10 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிபெற வைத்தனர். முன்னதாக இந்த தொடரில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலேயே சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்க ராகுல் திரிபாதிக்கு இப்போட்டியில் இடம் கிடைக்கவில்லை. அவராவது சமீபத்தில் தான் தேர்வானார் பரவாயில்லை ஆனால் நீண்ட காலம் பெஞ்சில் அமர்ந்திருக்கும் ருதுராஜ் கைக்வாட்க்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது நிறைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

ஏனெனில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அபாரமாக பேட்டிங் செய்து 635 ரன்களை விளாசி அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக ஆரஞ்சு கோப்பையை வென்று அந்த அணி 4வது கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் கடந்த ஜூலையில் இலங்கையில் நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமான அவர் சுமாராகவே செயல்பட்டார்.

- Advertisement -

உள்ளூர் செயல்பாடுகள்:
ஆனால் அதன்பின் நடந்த விஜய் ஹசாரே 50 ஓவர் உள்ளூர் கோப்பை தொடரில் மத்திய பிரதேசத்தின் கேப்டனாக வெளுத்து வாங்கிய அவர் 4 சதங்களை விளாசி ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்து 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார். அதனால் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தேர்வான அவர் அறிமுகமாக களமிறங்க 100% வாய்ப்புகள் இருந்தபோது துரதிஸ்டவசமாக காயத்தால் வெளியேறினார்.

அதன்பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வாகி பெஞ்சில் அமர்ந்திருந்தது அவர் ஐபிஎல் 2022 தொடரில் எதிர்பார்க்கப்பட்டதை விட 300+ ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டதுடன் அதன்பின் நடந்த தென் ஆப்ரிக்க டி20 தொடரில் கொடுத்த வாய்ப்பில் அசத்தவில்லை. மொத்தத்தில் 8 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 135 ரன்கள் 16.87 என்ற சுமாரான சராசரியில் எடுத்து டி20 கிரிக்கெட்டில் ஜொலிக்க தவறி வருகிறார். ஆனால் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டதால் அணியில் தேர்வாகி கடந்த ஜனவரி முதல் தொடர்ந்து 8 மாதங்களாக இந்தியா பங்கேற்ற 3 ஒருநாள் தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வரும் அவருக்கு இப்போதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

10 போட்டிகள்:
முதலில் தென் ஆப்ரிக்க தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர் காயத்தால் வெளியேறிய நிலையில் அதன்பின் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்தில் நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். தற்போது 10வது போட்டியாக மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் பென்சில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : INDvsZIM : காயத்திலிருந்து மீண்டு வந்து அற்புதமான கம்பேக் கொடுத்த தீபக் சாகர் – என்ன பண்ணிருக்காரு?

ஒருவேளை டி20 கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டதால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் சரிப்பட்டு வரமாட்டார் என்று அணி நிர்வாகம் கருதுகிறதா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அப்படியானால் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்த செயல்பாடுகள் எல்லாம் வீணாகி விட்டதா என்றும் அடுத்த சஞ்சு சாம்சன் தயாராகிவிட்டார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement