INDvsZIM : காயத்திலிருந்து மீண்டு வந்து அற்புதமான கம்பேக் கொடுத்த தீபக் சாகர் – என்ன பண்ணிருக்காரு?

Deepak-Chahar
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியானது ஜிம்பாப்வே அணியை 189 ரன்களுக்குள் சுருட்டியது.

KL-Rahul

- Advertisement -

இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சு காரணமாக ஜிம்பாப்வே 200 ரன்களை கூட தொடாமல் ஆட்டம் இழந்ததால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் போது அதிக தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட தீபக் சாகர் காயம் காரணமாக நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட பங்கேற்க முடியாத நிலையில் இருந்தார். அதனை தொடர்ந்து காயத்திற்கான சிகிச்சையினை மேற்கொண்டு வந்தார்.

Deepak Chahar 1

அதனால் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தொடர்ச்சியான காயம் காரணமாக அணிக்கு திரும்பாமல் இருந்த இவர் தற்போது ஜிம்பாப்வே தொடருக்கான இந்த ஒருநாள் தொடரில் இடம்பிடித்து மீண்டும் அணிக்கு திரும்பி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இந்த போட்டியில் மொத்தம் 7 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக பவர் பிளேவிலேயே பந்தினை இருபுறமும் ஸ்விங் செய்து அசத்திய அவர் துவக்க வீரர்கள் இருவரையும் ஆட்டம் இழக்க வைத்தார்.

இதையும் படிங்க : முட்டாள்தனமா பேசாதீங்க, எப்போதும் இது அழியாது – விமர்சகர்களுக்கு ரோஹித் சர்மா கொடுத்த பதிலடி

அதனை தொடர்ந்து 11-வது ஓவரின் முதல் பந்தில் மூன்றாவது வீரரையும் ஆட்டம் இழக்க வைத்து ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டரையே காலி செய்து அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்த்து பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 3 விக்கட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement