ஆர்.சி.பி டீம்ல கிடைச்ச இந்தவொரு விஷயம் வேறயெந்த டீம்லயும் எனக்கு கெடைச்சதில்லை – தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலிருந்தே விளையாடி வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய இவர் இதுவரை 228 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4370 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ள தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இருந்து பாதியில் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

karthik

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இந்த நடப்பு ஐபிஎல் தொடருக்காக பெங்களூரு அணி 5.5 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கி இருந்தது. பெங்களூர் அணியில் இடம் பிடித்த அவருக்கு பினிஷர் ரோலினை வழங்கிய பெங்களூரு அணி அவரை தொடர்ச்சியாக விளையாட வைத்தது. தினேஷ் கார்த்திக்கும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பெங்களூர் அணிக்கு அற்புதமான பினிஷிங் செய்து கொடுத்து வந்தார்.

இந்த தொடரில் மிகவும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த தினேஷ் கார்த்திக்கிற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம் ஐபிஎல் தொடரில் தனது செயல்பாட்டை அற்புதமாக வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான 2வது குவாலிபயர் போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூரு மீண்டும் ஒரு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டு இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

Dinesh Karthik Run Out Chahal

இந்நிலையில் இந்த ஆண்டும் கோப்பையை தவற விட்டு சென்ற பெங்களூர் அணி வீரர்கள் ரசிகர்களுக்காக சிறப்பு பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளனர். அப்படி ஆர்சிபி அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் ஆர்.சி.பி வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் தினேஷ் கார்த்திக் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் அந்த பதிவில் கூறியதாவது : நான் பல அணிகளில் அங்கம் வகித்துள்ளேன். ஆனால் இந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரு அணி எனக்கு கிடைத்தது இல்லை. ஏனென்றால் நான் எந்த மைதானத்தில் விளையாடினாலும் பெங்களூரு ரசிகர்கள் மிகச் சிறப்பான முறையில் அன்பை பகிர்ந்தார்கள். உண்மையாகவே ஆர்சிபி ரசிகர்களுக்கு உண்மையான நபராகவும், நன்றியுள்ளவனாகவும் இருக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க : விராட் கோலியை விட அவரின் கேப்டன்ஷிப் நல்லாருக்கு, அடுத்த சீசனிலும் தொடரலாம் – ஆர்சிபி கேப்டன் பற்றி முன்னாள் வீரர்

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் தூய்மையான அன்பை எங்களுக்காக அளித்தார்கள். நிச்சயம் அவர்களுக்காக அடுத்த ஆண்டு கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சிப்போம் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement