விராட் கோலியை விட அவரின் கேப்டன்ஷிப் நல்லாருக்கு, அடுத்த சீசனிலும் தொடரலாம் – ஆர்சிபி கேப்டன் பற்றி முன்னாள் வீரர்

RCB Faf Virat
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று களமிறங்கிய 10 அணிகளில் முதல் கோப்பையை முத்தமிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய பெங்களூரு முக்கியமானதாகும். ஏனெனில் கடந்த 2008 முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற ஜாம்பவான்கள் தலைமை வகித்தும் கோப்பையை வெல்ல முடியாத அந்த அணிக்கு 2013 – 2021 வரை கேப்டனாக விராட் கோலி பேட்டிங்கில் மலைபோல ரன்களைக் குவித்து முழுமூச்சுடன் கோப்பையை வெல்ல போராடினார். இருப்பினும் ஏதேனும் ஒரு முக்கிய தருணங்களில் சொதப்பிய அந்த அணி கோப்பையை வெல்ல தவறியதால் விராட் கோலி இருக்கும் வரை பெங்களூரு கோப்பையை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பது போன்ற பல விமர்சனம் எழுந்தது.

Faf Du Plessis RCB

அதனால் கடந்த வருடம் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலைமையில் தென் ஆப்பிரிக்கா போன்ற சர்வதேச அணிக்கு கேப்டன் செய்த அனுபவம் கொண்ட டு பிளேஸிசை வாங்கிய அந்த அணி நிர்வாகம் தங்களது கேப்டனாக நியமித்தது. அதைத் தொடர்ந்து புதிய ஜெர்ஸியுடன் புதிய கேப்டன் தலைமையில் புத்துணர்ச்சியாக களமிறங்கிய பெங்களூரு முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று அசத்தியது.

- Advertisement -

பெங்களூரு பரிதாபங்கள்:
ஆனால் அடுத்த 7 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து அந்த அணி 4-வது இடத்தைப் பிடித்திருந்த டெல்லியை கடைசி போட்டியில் மும்பை தோற்கடித்து உதவியதால் அதிர்ஷ்டதுடன் 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு சென்றது. அதன்பின் நடந்த எலிமினேட்டர் போட்டியில் ரஜத் படிதார் 112* (54) ரன்களுடன் சதமடித்து அசத்தியதால் லக்னோவை தோற்கடித்த பெங்களூரு 2020, 2021 போல் அல்லாமல் இம்முறை எலிமினேட்டரில் அசத்தல் வெற்றியை பெற்றது. ஆனால் பைனலுக்கு செல்வதற்காக நேற்று குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் எதிர்கொண்ட அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்று வெளியேறியது.

RCB Faf Du Plessis

அகமதாபாத் நகரில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த முக்கியமான போட்டியில் அதிரடியை காட்டவேண்டிய விராட் கோலி 7 (8), கேப்டன் டு பிளசிஸ் 25 (27), கிளன் மேக்ஸ்வெல் 24 (13), தினேஷ் கார்த்திக் 6 (7) என வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்ட நிலையில் மீண்டும் இளம் வீரர் படிதார் அதிகபட்சமாக 58 (42) ரன்கள் எடுத்தார். அதை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் அதிரடியாக சதமடித்து 10 பவுண்டரி 6 சிக்சர்கள் 106* (60) ரன்கள் விளாசியதால் 18.1 ஓவர்களில் 161/3 ரன்களை எடுத்த அந்த அணி மே 29இல் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் குஜராத்தை சந்திக்க தகுதி பெற்றது.

- Advertisement -

ஃபப் மோசமில்லை:
மொத்தத்தில் கெட்டப்பையும் கேப்டனையும் மாற்றிய போதிலும் எந்த பலனையும் அனுபவிக்காத பெங்களூரு வரலாற்றில் 15-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் விராட் கோலியை விட டுப்லஸ்ஸிஸ் தலைமையில் கடந்த வருடங்களை காட்டிலும் இம்முறை பெங்களூரு சற்று சிறப்பாக விளையாடியதால் அடுத்த வருடம் அவரே கேப்டனாக நீடிக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

Sanjay

இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “சில நல்ல அம்சங்களுடன் இது பெங்களூருவுக்கு சற்று சிறப்பான வருடமாக அமைந்தது. விராட் கோலியை விட டுப்லஸ்ஸிஸ் சிறந்த கேப்டனாக காட்சியளித்தார். ஆனால் அவரிடம் நிறைய எதிர்பார்க்கப்பட்டது. இந்த இடத்திற்கு நீண்ட தூரத்தை கடந்து வந்த அவர்கள் நிச்சயம் வென்றிருக்க வேண்டும். தங்கப் பதக்கத்தை வெல்ல முடியாமல் வெண்கலத்தை மட்டும் வாங்கும் அளவுக்கு எங்கே என்ன தவறு நடந்தது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

- Advertisement -

பந்துவீச்சு துறை சற்று முன்னேறியதற்கான பாராட்டு டு பிளேஸிஸ்க்கு செல்ல வேண்டும். அங்குதான் கேப்டன்சியை சிறந்த முறையில் பார்க்கிறோம். பேட்டிங்கிலும் இந்த வருடம் சிறப்பாக தொடங்கிய அவர் பாதியில் மற்றவர்களைப் போல தடுமாறினார். இருப்பினும் என்னைப் பொறுத்தவரை கேப்டனாக தொடர்வதற்கு அவர் தகுதியானவர்” என்று கூறினார்.

Mohammed Siraj De Kock

சிராஜ் மோசம்:
நேற்றைய முக்கியமான போட்டியில் 158 என்ற இலக்கை கட்டுப்படுத்த நினைத்த பெங்களூருவுக்கு ஹேசல்வுட், ஹர்ஷாப் படேல் போன்ற பவுலர்கள் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு போராடினார்கள். ஆனால் அதை வீணடிக்கும் வகையில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய இந்திய பவுலர் சிராஜ் 31 ரன்களை வாரி வழங்கியதால் எஞ்சிய 2 ஓவர்களை டுப்லஸ்ஸிஸ் அவரிடம் வழங்கவில்லை.

இதையும் படிங்க : எத்தனை தவறு செய்விங்க – மீண்டும் சொதப்பிய விராட் கோலியை வெளுத்து வாங்கும் முன்னாள் வீரர்கள்

அதுபற்றி முன்னாள் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி தனது கருத்தை தெரிவித்தது பின்வருமாறு. “சிராஜ் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் அவர் பந்து வீசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சீசனை போல இந்த முறையும் அவர் பந்து வீசியிருந்தால் பெங்களூரு வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருப்பார்” என்று கூறினார்.

Advertisement