எத்தனை தவறு செய்விங்க – மீண்டும் சொதப்பிய விராட் கோலியை வெளுத்து வாங்கும் முன்னாள் வீரர்கள்

Virat Kohli vs CSK
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் பைனலில் விளையாட போகும் 2-வது அணியாய் தீர்மானிக்கும் குவாலிபயர் 2 போட்டி நேற்று நடைபெற்றது. அகமதாபாத் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் மே 29இல் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்வதற்காக குஜராத்துடன் பலப்பரீட்சை நடத்த தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரஜத் படிடார் 58 (42) ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் ஓபனிங் ஜோடி 5.1 ஓவரிலேயே 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டலான தொடக்கம் கொடுத்தது. அதில் ஜெய்ஸ்வால் 21 (13) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (21) தேவ்தூத் படிக்கள் 9 (12) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானர்கள். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று சொல்லி அடித்த ஜோஸ் பட்லர் 10 பவுண்டரி 6 சிக்சருடன் 106* (60) ரன்கள் விளாசி இந்த வருடத்தின் 4-வது சதத்தை அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

பெங்களூரு சொதப்பல்:
அதனால் 18.1 ஓவரிலேயே 161/3 ரன்களை எடுத்த ராஜஸ்தான் 2008இல் முதல் முறையாக கோப்பையை வென்றதற்கு பின் 13 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம் இந்த முக்கியமான வாழ்வா – சாவா போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் முக்கிய தருணங்களில் சொதப்பிய பெங்களூரு வழக்கம்போல ஏமாற்றத்துடன் வெளியேறியது.

இந்த முக்கியமான நாக் அவுட் போட்டியில் அந்த அணிக்காக காலம் காலமாக விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஏற்கனவே பார்மின்றித் தவிக்கும் அவர் 7 (8) ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி ஏமாற்றினார். அத்துடன் ஒரு இளம் வீரராக ரஜத் படிதார் 58 ரன்கள் எடுத்து போராடிய நிலையில் கேப்டன் டு பிளசிஸ் 25 (27), கிளன் மேக்ஸ்வெல் 24 (13) தினேஷ் கார்த்திக் 6 (7) என முக்கிய வீரர்கள் அவருக்கு கை கொடுக்காமல் அவுட்டானது தோல்விக்கு காரணமானது.

- Advertisement -

ஏமாற்றிய கோலி:
அதிலும் டெஸ்ட் போட்டியை போல பிரசித் கிருஷ்ணா வீசிய அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தை தேவையின்றி அடிக்க முயன்ற விராட் கோலி பொறுப்பின்றி எட்ஜ் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனால் அதிருப்தியடைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீங்கள் பார்மில் இல்லாதபோது அனைத்து பந்துகளையும் பேட்டின் நடுவில் அடிக்க முயற்சித்தால் அது தாமாகவே தன்னம்பிக்கை கொடுக்கும். முதல் ஒருசில ஓவர்களில் அதுபோன்ற பந்துகளை தவறவிட்ட அவர் பார்மின்றி தவிக்கும் நேரத்தில் ஒரு தவறான பந்தை மட்டும் அடிக்க தேர்வு செய்து இதர பந்துகளை பின்பற்ற வேண்டும்”

“இது போன்ற விராட் கோலியை நமக்கு தெரியாது. இது வேறு யாரோ ஒருவர். தனது வாழ்நாளில் பேட்டிங்கில் அவர் செய்த தவறுகளை விட இந்த சீசனில் ஏகப்பட்ட தவறுகளை செய்துள்ளார். உங்களால் அதிக ரன்கள் அடிக்க முடியாத போது வெவ்வேறு திட்டங்களை முயற்சிப்பீர்கள். அந்த வகையில் விராட் கோலி சாத்தியமான அத்தனை வகைகளிலும் இந்த வருடம் அவுட்டானார்.

- Advertisement -

அந்த குறிப்பிட்ட பந்தை ஒன்று விட்டிருக்க வேண்டும் அல்லது முழு பலத்துடன் இழுத்து அடித்திருந்தால் விக்கெட் கீப்பர் தலைக்குமேல் எட்ஜ் பவுண்டரியாக போயிருக்கும். ஆனால் இறுதியில் விக்கெட் கீப்பர் கேட்ச் பிடிப்பதற்கு பயிற்சி கொடுப்பது போன்று அவுட்டானார். அதற்காக அவர் வருத்தமாக சென்றாலும் இப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் அவர் நிறைய ரன்கள் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம்” என்று தெரிவித்தார்.

அதேபோல் அப்படி எட்ஜ் வாங்கி அவுட்டானது பற்றி முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது டுவிட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. “தனக்கு உதவி செய்யவில்லை என்றாலும் விராட் கோலி தனது முன்னங்காலில் விளையாட முயற்சிக்கிறார். மனரீதியான கடினத்தன்மை உங்களை அதை எடுக்க வைக்கிறது என்றாலும் நுணுக்கங்களில் உள்ள தவறுகளை புறக்கணிக்க முடியாது. இந்த முக்கியமான போட்டியில் பவுன்ஸ் ஆகி வந்த ஷார்ட் லென்த் பந்தி அவர் விக்கெட்டை பறிகொடுத்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : கடைசி வரை மைதானத்தில் காத்திருந்த குட்டி ரசிகருக்கு ட்ரென்ட் போல்ட் குடுத்த – ஸ்பெஷல் கிப்ட்

இந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டான விராட் கோலி 16 போட்டிகளில் 341 ரன்களை 22.73 என்ற மோசமான சராசரியில் 115.99 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இது 2012க்கு பின் அவர் எடுத்த குறைவான ஸ்கோராகும்.

Advertisement