கே.எல் ராகுலின் இந்த நிலைமை எனக்கும் வந்திருக்கு. அப்போலாம் நான் அழுதிருக்கேன் – மனம்திறந்த தினேஷ் கார்த்திக்

Dinesh-Karthik-and-KL-Rahul
- Advertisement -

இந்திய அணியின் இளம் துவக்க வீரரான கே.எல் ராகுல் கடந்த பல தொடர்களாகவே மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதன் காரணமாக அவர்மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதோடு தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் கே.எல் ராகுல் தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்பிலும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதால் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.

KL-Rahul

- Advertisement -

இந்நிலையில் கே.எல் ராகுல் ஒரு திறமையான வீரர் என்றும் அவருக்கு மாற்று இல்லை, அவருக்கு தற்போது சிறிய இடைவெளி மட்டுமே தேவை என்று தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அதுமட்டும் இன்றி கே.எல் ராகுல் போன்ற நிலைமையை நானும் கடந்து வந்துள்ளேன் என்றும் அந்த நிலைமை எவ்வளவு வலி மிகுந்ததாக இருக்கும் என்று தனக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கே.எல் ராகுல் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : இனிவரும் அடுத்தடுத்த போட்டிகளில் கே.எல் ராகுல் அணியில் எடுக்கப்படாமல் வெளியில் அமர வைக்கப்பட்டார் என்றால் அது ஒரு இன்னிங்சால் ஏற்பட்ட மாற்றம் கிடையாது. கடந்த 5-6 டெஸ்ட் போட்டிகளாகவே அவர் எவ்வாறு செயல் பட்டிருக்கிறார் என்றும் அதனால் தான் நாம் அமர வைக்கப்பட்டு இருக்கிறோம் என்றும் அவருக்கு நிச்சயம் புரியும்.

KL Rahul 1

கே.எல் ராகுல் ஒரு திறமையான வீரர். மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அவரால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். இந்த கடினமான நேரத்தில் அவருடைய டெக்னிக்கில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் தற்போது நடக்கும் சூழ்நிலையை அவர் புரிந்து கொண்டு சிறிது இடைவேளையை அவர் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

நிச்சயம் ஒரு ஓய்விற்கு பிறகு அவர் திரும்ப வந்தால் அவரால் மிகச் சிறப்பான ஆட்டத்தை கொண்டு வர முடியும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : ஒவ்வொரு வீரருமே இது போன்ற மோசமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும் அதை சமாளித்து வெளியே வர வேண்டும் நானும் ஒரு வீரராக இதே போன்ற சூழ்நிலையை சந்தித்துள்ளேன்.

இதையும் படிங்க : சொந்த வெறுப்பில் பேசாதீங்க, ராகுலை சச்சினுடன் ஒப்பிட்ட ஆகாஷ் சோப்ரா – வெங்கடேஷ் பிரசாத்துக்கு கொடுத்த பதிலடி என்ன

அப்போதெல்லாம் எனக்கு இதுதான் கடைசி இன்னிங்ஸ் என்று தோன்றி ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் உள்ள கழிப்பறையில் சென்று ஓரிரு துளிகள் கண்ணீர் சிந்துவேன் அந்த அளவுக்கு அந்த சூழ்நிலை மோசமாக இருக்கும் என்றும் அதனையும் தான் அனுபவித்துள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement