சொந்த வெறுப்பில் பேசாதீங்க, ராகுலை சச்சினுடன் ஒப்பிட்ட ஆகாஷ் சோப்ரா – வெங்கடேஷ் பிரசாத்துக்கு கொடுத்த பதிலடி என்ன

Venkatesh prasad Aakash Chopra
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் தற்சமத்தில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் உச்சகட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறார். 2014இல் அறிமுகமாகி ஆரம்பத்தில் தடுமாறிய அவர் 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்தார். ஆனால் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதே போல் 2022 ஜனவரி மாதம் கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்திருந்த அவர் கடந்த ஒரு வருடமாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பி வருகிறார்.

KL Rahul Dravid

- Advertisement -

ஆனாலும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்பு பெற்று வரும் ராகுலை கடுமையாக விமர்சித்து வரும் ரசிகர்களுக்கு மத்தியில் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கடந்த சில தினங்களாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாகவே சரமாரியாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக இது போன்ற மோசமான தருணங்கள் சகஜம் என்றாலும் வெளிநாட்டில் சிறந்த தொடக்க வீரராக செயல்பட்டுள்ள ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டிக்கு பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்தார்.

ஏஜென்ட் பணம்:
ஆனால் ஷிகர் தவான், ரகானே ஆகியோர் ராகுலை விட வெளிநாட்டில் சிறந்த புள்ளி விவரங்களை வைத்துள்ளதாக ஆதாரத்துடன் ராகுல் டிராவிட்டுக்கு வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுத்தார். அத்துடன் ராகுல் மீது தமக்கு எந்த பகையும் இல்லை என்று தெளிவுபடுத்திய அவர் பார்முக்கு திரும்ப புஜாரைவை போல ஐபிஎல் தொடரை புறக்கணித்து விட்டு கவுண்டி சாம்பியன்ஷி தொடரில் விளையாட முடியுமா? என்ற கோரிக்கையும் வைத்தார். இந்நிலையில் தவறான புள்ளி விவரங்களுடன் வெங்கடேஷ் பிரசாத் இப்படி விமர்சிப்பதாக பதிலடி கொடுக்கும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ராகுலை சச்சினுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

Venkatesh prasad KL rahul

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் (பிரசாத்) ராகுலின் வெளிநாட்டு புள்ளி விவரங்கள் சுமாராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டு போட்டிகளைத் தவிர்த்து ராகுல் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் அதை தவிர்க்குமாறும் அவர் எங்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் இது சச்சின் டெண்டுல்கர் அடித்த சதங்களை விட்டுவிட்டு எவ்வளவு முறை டக் அவுட்டாகியுள்ளார் என்று பார்ப்பது போல் தவறான கண்ணோட்டமாகும்”

- Advertisement -

“மேலும் சுப்மன் கில் சொந்த மண்ணில் வெளிப்படுத்திய புள்ளி விவரங்கள் பற்றி வெங்கடேஷ் பிரசாத் எதுவும் எழுதவில்லை. ஆனால் அவர் காட்டியுள்ள பேட்டிங் சராசரியின் படி சுப்மன் கில் 11 இன்னிங்ஸில் 26.3 என்ற சராசரியை மட்டுமே கொண்டுள்ளார். அதற்காக அதை வைத்து அவரை மதிப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏனெனில் அவர் மிகச் சிறந்த வீரர். அதே போல் ஷிகர் தவான் வெளிநாட்டில் 39 சராசரியை கொண்டுள்ளதாக வெங்கடேஷ் பிரசாத் பேசினார். ஆனால் அவர் அவருடைய சேனா புள்ளி விவரங்களை பற்றி பேசவில்லை. ஏனெனில் சேனா நாடுகளில் ஷிகர் தவான் நியூசிலாந்தில் மட்டும் ஒரு சதமடித்து 26 என்ற சுமாரான சராசரியை கொண்டுள்ளார்”

Chopra

“அதே போல் மயங் அகர்வால் வெளிநாட்டு மண்ணில் 25 என்ற சராசரியை மட்டுமே கொண்டுள்ளார். ஆனால் கடந்த 3 மாதங்களில் அவரது சிறந்த செயல்பாடுகளை தவிர்த்து கடந்த 2 வருடங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட அவர் பெரிய அளவில் செயல்படவில்லை. மொத்தத்தில் கேஎல் ராகுல் ரோகித் சர்மா போல வருவார் என்று நான் சொல்லவில்லை”

இதையும் படிங்க: IND vs AUS : அவ்ளோதான் ஆஸ்திரேலியாவோட கட்டம் முடிந்தது. மேலும் ஒரு முக்கிய வீரர் – தொடரில் இருந்தே விலகல்

“ஆனால் அவரை விமர்சிக்காமல் அனைவரும் பொறுமையாக இருங்கள் என்று சொல்கிறேன். ஒருவேளை ஏதேனும் நிகழ்ச்சி நிரல் இருந்தால் அவற்றைப் பிடுங்க வேண்டும். உண்மையில் இருக்கும் புள்ளி விவரங்களை பேசுவோம் மாறாக உங்களுக்கு ஏற்ற புள்ளி விவரங்களை பற்றி பேசாதீர்கள்” என்று கூறினார்.

Advertisement