IND vs AUS : அவ்ளோதான் ஆஸ்திரேலியாவோட கட்டம் முடிந்தது. மேலும் ஒரு முக்கிய வீரர் – தொடரில் இருந்தே விலகல்

David-Warner
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தற்போது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மார்ச் 1-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் துவங்க உள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் விலகி இருந்தனர். அதோடு மேலும் சில வீரர்களும் காயம் காரணமாக பாதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலிய அணி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இப்படி ஒரு நிலையில் ஆஸ்திரேலிய அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் வேளையில் மேலும் ஒரு பின்னடைவாக தற்போது அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான டேவிட் வார்னரும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இரண்டாவது போட்டியின் போது முதல் இன்னிங்சில் விளையாடிய வார்னர் அவ்வப்போது இந்திய வீரர்களின் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் தலை மற்றும் தோள்பட்டை, கைகள் என அனைத்து இடங்களிலும் காயம் அடைந்ததார்.

Warner 1

இதன் காரணமாக அவரால் முதல் இன்னிங்ஸ்க்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் பங்கேற்க முடியவில்லை. எனவே அவருக்கு பதிலாக மேத்யூ ரென்ஷா மாற்று வீரராக களம் இறக்கப்பட்டார். இந்நிலையில் டேவிட் வார்னருக்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் தற்போது பலமானதாக மாற அவர் மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு அவரது காயம் இன்னும் அதிகரித்துள்ளதால் அவர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்தே விலகி நாடு திரும்ப உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே வார்னர் கடைசி இரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்பதனால் அவருக்கு பதிலாக யார் துவக்க வீரராக களம் இறங்குவார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் வார்னருக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் ஏற்கனவே துவக்க வீரராக களமிறங்கி இருந்தாலும் அவர் முழுநேர துவக்க வீரர் இல்லை என்பதனால் கேமரூன் க்ரீன் துவக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs AUS : எல்லாரும் அதுல விளையாடி கெட்டு போயிட்டீங்க, ஆஸி பேட்ஸ்மேன்களை விளாசிய மைக் ஹசி – காரணம் இதோ

இப்படி ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து அணியிலிருந்து வெளியேறி வருவதால் நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி நான்குக்கு பூஜ்யம் (4-0) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement