IND vs AUS : எல்லாரும் அதுல விளையாடி கெட்டு போயிட்டீங்க, ஆஸி பேட்ஸ்மேன்களை விளாசிய மைக் ஹசி – காரணம் இதோ

Hussey
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. அதனால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ள ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் கடைசி 2 போட்டிகளில் வென்று ஒயிட்வாஷ் அவமான தோல்வியை தவிர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது.

Nathan Lyon Pujara IND vs AUS

- Advertisement -

முன்னதாக இத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே பயிற்சி போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து விட்டு பிட்ச் பற்றி வேண்டுமென்றே விமர்சித்த ஆஸ்திரேலியா வாயில் பேசியதை செயலில் காட்டாமல் படு மோசமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 177, 91 என 2 இன்னிங்ஸிலும் குறைவான ரன்களுக்கு அவுட்டான அதே பிட்ச்சில் 400 அடித்த இந்தியா ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது. அதை விட டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் பெரும்பாலான ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திண்டாடியதும் அம்பலமானது.

விளாசும் மைக் ஹசி:
ஏனெனில் ஜடேஜா போன்ற தரமான இந்திய ஸ்பின்னர்கள் கையிலிருந்து சுழலாமல் நேராக வந்த பந்துகளை சமாளிக்க தெரியாத ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்தனர். அதனால் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட்கெட்டில் 5 வீரர்கள் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்து கிளீன் போல்ட்டானார்கள். அந்த வகையில் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தெரியாமல் திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை முன்னாள் வீரர்களே கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Ravichandran Ashwin Steve Smith

அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸி டி20 கிரிக்கெட்டில் விளையாடி விளையாடி இந்திய சூழ்நிலைகளில் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தேவையான டெக்னிக்கை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டதாக விமர்சித்துள்ளார். குறிப்பாக கடந்த 10 – 15 வருடங்களுக்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்வீப் ஷாட் அடித்து பார்த்ததில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பாக்ஸ் கிரிக்கெட் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் சொல்வது போல் நிச்சயமாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடும் ஆட்டத்தை நிறைய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான தரமான ஷாட்களை தவிர்த்து ஸ்வீப், ரேம்ப் போன்ற வித்தியாசமான அனைத்து ஷாட்டுகளையும் இப்போட்டியில் நாம் பார்த்தோம். ஆனால் இந்த ஷாட்களை நாம் நமது வரலாற்றில் எப்போதும் பார்த்ததில்லை. குறிப்பாக கடந்த 10 – 15 வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா இப்படி விளையாடவில்லை. எனவே என்னுடைய இந்த விமர்சனம் நியாயமானது என்று உங்களுக்கு தெரியும்”

Hussey

“இந்த ஷாட்களை நீங்கள் எப்போது தேர்வு செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும். இது போன்ற ஷாட்களை உங்களது பேட்டிங் களஞ்சியத்தில் வைத்திருப்பது மிகவும் நல்லதாகும். ஆனால் அதை சரியான சூழ்நிலையில் சரியான வகை பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சரியான நேரத்தில் விளையாடுவது தான் மிகவும் முக்கியமாகும். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அதை இந்த போட்டியில் சரியாக செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க: நாங்களும் இதை தான் ட்ரை பண்ணோம், ஆனா அவங்க பாகிஸ்தானை துவம்சம் பண்ணிட்டாங்க – இந்தியாவை பார்த்து ரமீஸ் ராஜா ஆதங்கம்

அவர் கூறுவது போல ஸ்வீப் ஷாட் என்பது டி20 கிரிக்கெட்டில் அடிக்கடி அடிக்கப்பட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப்படியான அழுத்தம் இருக்கும் போது மட்டுமே பவுலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் திடீரென அடிக்கக்கூடிய ஒரு வகையான ஷாட்டாகும். ஆனால் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் குறைவான பவுன்ஸ் இருக்கும் போது 10க்கு 6 தருணங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்வீப் ஷாட் அடித்து தவறு செய்தனர். குறிப்பாக 2வது போட்டியில் 81 ரன்கள் எடுத்த உஸ்மான் கவாஜா கூட நன்கு செட்டிலான தைரியத்தில் அந்த சாட்டை அடித்து அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

Advertisement