நாங்களும் இதை தான் ட்ரை பண்ணோம், ஆனா அவங்க பாகிஸ்தானை துவம்சம் பண்ணிட்டாங்க – இந்தியாவை பார்த்து ரமீஸ் ராஜா ஆதங்கம்

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 2004க்குப்பின் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் அதற்காக ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையின்றி விமர்சித்த ஆஸ்திரேலியா இதுவரை நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் இந்தியாவின் தரமான சுழல் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 3 நாட்களுக்குள் சுருண்டு அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது.

Ravichandran Ashwin Steve Smith

- Advertisement -

குறிப்பாக முதல் போட்டியில் 3வது நாள் உணவு இடைவெளியில் களமிறங்கிய அந்த அணி தேநீர் இடைவெளிக்கு முன் வெறும் 91 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 132 வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்த இந்தியா ஆஸ்திரேலியாவின் பிட்ச் பற்றிய குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி அதிரடி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு 263 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா பந்து வீச்சில் நேதன் லயன் மாயாஜால சுழலில் ஒரு கட்டத்தில் இந்தியாவை 139/7 என மடக்கி பிடித்தது.

துவம்சம் பண்ணிட்டாங்க:
ஆனால் அப்போது சிம்ம சொப்பனமாக மாறிய அக்சர் பட்டேல் – அஸ்வின் ஆகியோர் 8வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவின் கனவை உடைத்தார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் அதன் பின் வெறும் 1 ரன் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை அடுத்த 2 மணி நேரத்திற்குள் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகள் சாய்த்து வெறும் 114 ரன்கள் சுருட்டி தோற்கடித்தார். அதனால் 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை வென்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ள இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை அசால்டாக தோற்கடித்து தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது.

pak vs aus

ஆனால் இதே ஆஸ்திரேலியா கடந்த வருடம் பிப்ரவரியில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்து 1 – 0 (3) என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது என்பது அசாத்தியமாகிவிட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார். இருப்பினும் கடந்த வருடம் இந்தியாவைப் போல சுழலுக்கு சாதகமான மைதானம் அமைத்து எதிரணிகளை தோற்கடிக்கும் தங்களது முயற்சி வெற்றி பெறவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆஸ்திரேலியாவின் இந்த போட்டிகள் பினிஷிங் ஆன விதம் ஒரு காலத்தில் பெர்த், பிரிஸ்பென் மைதானங்களில் அவர்கள் ஆசிய அணிகளை தோற்கடித்து பினிஷிங் செய்த விதத்தை போல் இருக்கிறது. தற்போது காலம் மாறிவிட்டது. இந்த தோல்வி இந்தியாவில் தரமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட போதிய அளவுக்கு ஆஸ்திரேலியா தயாராகவில்லை என்பதை காட்டுகிறது. அவர்கள் சுழல் பந்து வீச்சிக்கு எதிராக சுமாராக செயல்பட்டார்கள். ஏனெனில் ஒரு செசனில் 9 விக்கெட்டுகளை இழந்தார்கள்”

PAK Ramiz Raja

“குறிப்பாக ஆஸ்திரேலியா பெரிய ரன்களை முன்னிலை பெற வேண்டிய சமயத்தில் அவர் அஷ்வினுடன் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து தடுத்தார். அதை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா மனதளவில் உறுதியாக இல்லை. டெக்னிக்கல் அளவிலும் தடுமாறினார்கள். குறிப்பாக சுழல் பந்து வீச்சுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. ஜடேஜா மிகச்சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இருப்பினும் இந்த போட்டியில் அக்சர் படேல் பேட்டிங் தான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மோசமான சூழ்நிலைகளில் அவர் 60 – 70 ரன்கள் எடுத்தார்”

இதையும் படிங்க:இந்தியா மீது பழி போட்டு பெரிய தப்பு பண்ணிட்டீங்க, அது தான் நம்ம தோல்விக்கு காரணம் – ஆஸியை விளாசும் மைக்கேல் கிளார்க்

“அவர்கள் ஸ்வீப் போன்ற தவறான ஷாட்களை அடித்தனர். மொத்தத்தில் இந்தியாவை சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் தோற்கடிப்பது அசாத்தியமாகி விட்டது. அவருடைய இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானும் இதே போல சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து எதிரணியை தோற்கடிக்க முயற்சித்தது. ஆனால் அது நடைபெறவில்லை. மறுபுறம் இந்தியா தங்களது சூழ்நிலைகளை சரியாக அமைத்து தங்களுடைய செயல்பாடுகள் மற்றும் திறமையில் நம்பிக்கை வைத்து ஆஸ்திரேலிய பேட்டிங்கை உடைத்து விட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement