இந்தியா மீது பழி போட்டு பெரிய தப்பு பண்ணிட்டீங்க, அது தான் நம்ம தோல்விக்கு காரணம் – ஆஸியை விளாசும் மைக்கேல் கிளார்க்

Micheal Clarke IND vs AUS
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கடைசியாக 2014/15இல் இத்தொடரை வென்றிருந்த ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது. எனவே ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா இவை அனைத்திற்கும் பழி தீர்த்து 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது.

Ravichandran Ashwin Steve Smith

- Advertisement -

ஆனால் 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் பயிற்சி போட்டியில் பச்சை புற்கள் நிறைந்த பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் முதன்மை போட்டிகளில் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டிருந்ததாகவும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே விமர்சித்த ஸ்டீவ் ஸ்மித் இம்முறை இந்தியாவிடம் நியாயத்தையும் நம்பிக்கையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். அப்படி கடந்த முறை பயிற்சி போட்டியில் நியாயமான பிட்ச் கொடுக்காததால் இம்முறை இந்தியாவை நம்பாமல் இத்தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெறக்கூடிய வழக்கமான பயிற்சி போட்டிகளை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.

தப்பு பண்ணிட்டீங்க:
அத்துடன் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக சிட்னியில் வேண்டுமென்றே தாறுமாறாக சுழலும் பிட்ச்சை உருவாக்கி அதில் பயிற்சி எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வந்ததும் பெங்களூருவில் சில நாட்கள் அஸ்வின் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்ப்பினரை தேடி பிடித்து வலைப்பயிற்சியில் மட்டும் ஈடுபட்டு விட்டு நேராக இத்தொடரில் களமிறங்கினர். ஆனால் கடைசியில் வாயில் பேசியதை செயலில் காட்ட தவறிய ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது.

Steve Smith Harsha Bhogle

மறுபுறம் சுழலுக்கு சாதகமான அதே பிட்ச்சில் முதல் போட்டியில் 400 ரன்கள் அடித்த இந்தியா ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது. மேலும் 2வது போட்டியில் நேராக வரும் பந்துகளை கூட சரியாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாத ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லா நேரங்களிலும் ஸ்வீப் ஷாட் அடித்து அவுட்டானார்கள். இந்நிலையில் பிட்ச் பற்றி இந்தியா மீது தேவையின்றி பழி போட்டு இத்தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டிகளில் விளையாட தவறியதே ஆஸ்திரேலியாவின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு முக்கிய காரணமென்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாம் இந்திய சூழ்நிலைக்கு சரியாக உட்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் நான் இந்தியாவில் ஸ்வீப் ஷாட் அடிக்காதீர்கள் என்று சொல்லவில்லை. மாறாக சரியான நேரத்தில் போட்டியின் சரியான சமயத்தில் பிட்ச்சின் தன்மையை அறிந்து ஸ்வீப் ஷாட் அடியுங்கள் என்று தான் சொல்கிறேன். ஏனெனில் பந்து பவுன்ஸ் ஆகும் போது அதற்கு எதிராக நீங்கள் ஸ்வீப் ஷாட் அடிப்பது மிகவும் கடினமாகும். எனவே பேட்டிங்கின் அடிப்படை மற்றும் இந்திய சூழ்நிலைகளில் சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ளும் யுக்தியில் ஆஸ்திரேலியாவின் தவறு நிகழ்ந்துள்ளது”

Clarke

“மேலும் 2வது போட்டியில் 100 ரன்கள் மட்டுமே நாம் இலக்காக நிர்ணயித்த போது பட் கமின்ஸ் 4 பீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்தியிருந்தார். அது ஒன்று நீங்கள் இந்தியாவை 100 ரன்களுக்குள் அவுட்டாக்குவது அல்லது தோற்பதற்கு சமமான ஃபீல்டிங். நீங்கள் தோற்பது முடிவாகிவிட்டால்அது 20 ஓவரிலோ அல்லது 2 நாட்களிலோ தோற்பது சம்பந்தமில்லை. எனவே ஆஃப் ஸ்லிப், லெக் ஸ்லிப் ஆகிய பீல்டர்களை நிறுத்தியிருக்க தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது பந்து பவுன்ஸ் ஆகி எதிரணி தவறு செய்தால் நிச்சயமாக உங்களால் வெற்றி பெற முடியும். இதைத்தான் ஆஸ்திரேலியா செய்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: எனக்கு பிசிசிஐ வேலையும் பணமும் தேவையில்ல ஆனா நீங்க சொல்றது தப்பு – வெங்கடேஷ் பிரசாத்க்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

“ஆனால் மிட் ஆஃப், மிட் ஆன், டீப் பாய்ண்ட், டீப் ஸ்கொயர் லெக் ஆகிய பீல்டர்கள் முன்னாடி நின்றதை தான் நான் பார்த்தேன். இவை அனைத்தையும் விட நாம் எந்த பயிற்சி போட்டியிலும் விளையாடாதது மிக மிகப்பெரிய தவறாகும். இந்திய கால சூழ்நிலை புரிந்து கொள்வதற்கு குறைந்தபட்சம் ஒரு பயிற்சி போட்டியில் நாம் விளையாடிருக்க வேண்டும். மேலும் நமது தேர்வு குழுவினரும் டி20 உலக கோப்பையில் செய்த தவறு போலவே மீண்டும் மிகப்பெரிய தவறு செய்துள்ளார்கள்” என்று கூறினார்.

Advertisement