எனக்கு பிசிசிஐ வேலையும் பணமும் தேவையில்ல ஆனா நீங்க சொல்றது தப்பு – வெங்கடேஷ் பிரசாத்க்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

Venkatesh prasad Aakash Chopra
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் தற்சமயத்தில் இந்திய அணியில் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்ப காலங்களில் சுமாராக செயல்பட்டாலும் 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார். அதனால் அவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடியாக உயர்ந்த நிலையில் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினர் அவரை அடுத்த கேப்டனாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் தடவலாக பேட்டிங் செய்த அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

ஆனாலும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்துக்காக வாய்ப்பு பெற்றும் வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஒரு வருடமாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பி வருவதால் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். குறிப்பாக 8 வருடங்கள் விளையாடி 40க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறுவதற்கு நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் நேரடியாகவே ராகுலை விமர்சித்தார்.

- Advertisement -

எனக்கு பணம் வேண்டாம்:
மேலும் உங்களால் சர்பராஸ் கான், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் உங்களை விட அஷ்வின் மிகச் சிறந்த துணை கேப்டன் என்று கடுமையாக சாடினார். அதை விட இவை அனைத்தும் தெரிந்த சில முன்னாள் வீரர்கள் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராகவும் ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளராகவும் செயல்படுவதால் கிடைக்கும் பணமும் வேலையும் போய்விடும் என்ற பயத்தில் ராகுலை விமர்சிக்காமல் அமைதி காப்பதாகவும் வெங்கடேஷ் பிரசாத் அதிரடியாக பேசினார்.

அந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் சொதப்பி வரும் ராகுல் வெளிநாட்டு மண்ணில் சிறந்த தொடக்க வீரராக செயல்பட்டுள்ளதால் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் பயிற்சியார் ராகுல் டிராவிட் ஆதரவு கொடுத்தார். அதனால் அதிருப்தியடைந்த வெங்கடேஷ் பிரசாத் ராகுலை விட ஷிகர் தவான், ரகானே போன்றவர்கள் வெளிநாட்டு மண்ணில் சிறந்த புள்ளி விவரங்களை வைத்திருந்தும் தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தவறியதால் அதிரடியாக நீக்கப்பட்டதாக டிராவிட்டுக்கு ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் சேனா நாடுகள் எனப்படும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 சவாலான வெளிநாடுகளில் கடந்த 3 வருடங்களில் ரோகித் சர்மாவுக்கு பின் 541 ரன்களை 38.64 என்ற நல்ல சராசரியுடன் குவித்து 2வது சிறந்த தொடக்க வீரராக செயல்பட்ட காரணத்தாலேயே ராகுலுக்கு கேப்டன், பயிற்சியாளர், அணி நிர்வாகம் போன்ற அனைவரும் ஆதரவு கொடுப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக இதை தெரிவிப்பதால் பிசிசிஐ வேலை அல்லது பணம் எனக்கு வேண்டாம் என்று வெளிப்படையாகவே வெங்கடேஷ் பிரசாத்க்கு பதிலடி கொடுத்துள்ள அவர் இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு.

“சேனா நாடுகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் (புள்ளிவிவர பட்டியல்). ஒருவேளை இது தான் தேர்வுக்குழுவினர், பயிற்சியாளர், கேப்டன் ஆகியோர் கேஎல் ராகுலுக்கு இந்த ஆதரவை கொடுப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் அவர் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் எனக்கு பிசிசிஐ அமைப்பில் தேர்வுக்குழு அல்லது பயிற்சியாளராக எந்த வேலையும் தேவையில்லை. அதே போல் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் ஆலோசகராக அல்லது பயிற்சியாளராக செயல்படும் வேலையும் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs AUS : முதல் சேப்டர் மட்டுமே முடிஞ்சுருக்கு, எஞ்சிய தொடரில் அவர் உங்களை தாக்கலாம் – இந்தியாவை எச்சரித்த பிரட் லீ

இருப்பினும் அதை பார்க்கும் ரசிகர்கள் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய தொடர் என்ன வெளிநாட்டில் நடக்கிறதா? என்றும் 2022 டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் ராகுல் செயல்பாடுகளை மறந்து விட்டு நீங்களும் இப்படி பேசுவது நியாயமா? என்றும் ஆகாஷ் சோப்ராவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement