IND vs AUS : முதல் சேப்டர் மட்டுமே முடிஞ்சுருக்கு, எஞ்சிய தொடரில் அவர் உங்களை தாக்கலாம் – இந்தியாவை எச்சரித்த பிரட் லீ

Lee
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று 2004க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி தேவையற்ற விமர்சனங்களை வைத்த ஆஸ்திரேலிய அணியினர் வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறியதால் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வியை சந்தித்தனர்.

- Advertisement -

மறுபுறம் சொந்த மண்ணில் கடந்த 10 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. அத்துடன் 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ள இந்தியா 2017, 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த 4 கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும் சாதனை படைத்துள்ளது.

பிரட் லீ எச்சரிக்கை:
அதனால் பெரிய பின்னடைவை சந்தித்துள்ள ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் எஞ்சிய போட்டிகளில் வென்று இத்தொடரை சமன் செய்து ஒயிட்வாஷ் அவமான தோல்வியை தவிர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்கும் முயற்சியில் போராட உள்ளது. இருப்பினும் அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித், லபுஸ்ஷேன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தரமான சுழல் பந்து வீச்சில் திண்டாடுவது அந்நாட்டு ரசிகர்களுக்கு கவலையாகவே இருந்து வருகிறது. அதே போல் இந்திய அணியில் அஸ்வின் – ஜடேஜா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஜோடியாக தெறிக்க விடும் நிலையில் ஆஸ்திரேலிய அணியில் முதல் போட்டியில் டோட் முர்பி அசத்தினார்.

Todd Murphy 1

2வது போட்டியில் நேதன் லயன் அசத்தினர். ஆனால் இதுவரை சேர்ந்தால் போல் 2 ஸ்பின்னர்கள் இந்தியாவுக்கு சவால் கொடுக்காதது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக அமைந்து வருகிறது. அதனால் கடைசி 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெல்வது கடினமாக பார்க்கப்பட்டாலும் இன்னும் இத்தொடரின் கதை முடியவில்லை என்று முன்னாள் பிரட் லீ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய சூழ்நிலைகளை புரிந்து கொண்டுள்ள டோட் முர்பி 2வது போட்டியில் ஃபார்முக்கு திரும்பியுள்ள நேதன் லயனுடன் இணைந்து சவாலை கொடுப்பார் என்பதால் எஞ்சிய தொடரில் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நேதன் லயனுக்கு பின் இந்தியாவிற்கு சவாலை கொடுக்கப் போவது யார்? என்னைப் பொறுத்த வரை அதற்கான பதில் 22 வயதாகும் இளம் சூப்பர் ஸ்டார் ஆஃப் ஸ்பின்னர் டோட் முர்பி ஆவார். ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகப் போட்டியில் அவர் அபாரமாக செயல்பட்டார்”

Lee

“அந்த போட்டியில் ஆஸ்திரேலியா பெரிய அளவில் தோற்றிருக்கலாம். ஆனால் டோட் முர்பி தனது சிறந்து செயல்பாடுகளால் உலகை திரும்பி பார்க்க வைத்து குறிப்பை எடுத்துக் கொள்ள வைத்தார். அப்போட்டியில் ஆஸ்திரேலியா பந்து வீசிய ஒரு இன்னிங்ஸில் அவர் 7/124 விக்கெட்டுகளை எடுத்தார். அதுவும் ராகுல், அஸ்வின், புஜாரா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்ற தரமானவர்களை அவர் சாய்த்தார். எனவே நிச்சயமாக அது அவருக்கு கனவு அறிமுகப் போட்டியாக அமைந்தது. குறிப்பாக நாக்பூரில் தனது குடும்பத்தின் முன்னிலையில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார்”

இதையும் படிங்க:IND vs AUS : 3 சீசனில் 2 கோப்பை, 10 வருடங்கள் கழித்து ஒன்டே கிரிக்கெட்டிலும் மாஸ் கம்பேக் கொடுத்த வைராக்கிய வீரர்

“அந்த அனுபவத்தில் இந்திய கால சூழ்நிலைகளில் எஞ்சிய தொடரிலும் அவர் அசத்துவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். இருப்பினும் அவருக்கு எஞ்சிய தொடர் கடினமாக இருக்கும். அதில் அவர் அசத்துகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் முதல் சேப்டர் மட்டுமே முடிந்துள்ளது. அதில் டோட் முர்பி தன்னுடைய அற்புதமான கேரியரை துவக்கியுள்ளார். எனவே அவரை கண்டிப்பாக பாருங்கள் இந்தியா” என்று பாராட்டி இந்தியாவை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறியுள்ளார்.

Advertisement