- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணி செய்த இந்த 3 தவறுதான் லார்ட்ஸ் போட்டியில் தோற்க காரணம் – தினேஷ் கார்த்திக் கருத்து

இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 170 ரன்களை மட்டுமே குவித்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதுமட்டும் இன்றி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த இந்திய வீரர்கள் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய : தினேஷ் கார்த்திக்

இந்நிலையில் இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய அணி செய்த மூன்று முக்கிய தவறுகளையும் அவர் சுட்டிக்காட்டி தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

அப்படி அவர் கூறியதாவது : இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 376 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்த வேளையில் அடுத்த 11 ரன்களை அடிப்பதற்குள் கடைசி நான்கு விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த திடீர் சரிவினால் இங்கிலாந்து அணியை விட முதல் இன்னிங்ஸில் நாம் அதிக ரன்களை குவிக்க முடியாமல் போனது.

இப்படி முதல் இன்னிங்சில் பிற்பாதியில் ஏற்பட்ட ரன் தொய்வு இந்திய அணியின் வெற்றி வாய்ப்பையும் பாதித்துள்ளது என தினேஷ் கார்த்திக் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : முதல் இன்னிங்ஸின் போது இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் 5 ரன்களில் கொடுத்த கேட்சை கே.எல் ராகுல் தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திய ஜேமி ஸ்மித் 51 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அவரது அந்த அற்புதமான இன்னிங்ஸ் இங்கிலாந்து அணியின் ரன் குவிப்பிற்கும் முக்கிய காரணமாக மாறியது. போட்டியின் அந்த சூழலில் கே.எல் ராகுல் தவறவிட்ட கேட்ச் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : கை விரலில் ஏற்பட்ட காயம்.. 4 ஆவது போட்டியில் பண்ட் விளையாடுவாரா? மாட்டாரா? – சுப்மன் கில் அளித்த பதில்

இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 63 ரன்களை உதிரியாக வழங்கியிருந்தனர். அதேவேளையில் இங்கிலாந்து அணி 32 ரன்களை மட்டுமே உதிரி வாயிலாக வழங்கியிருந்தது. இப்படி உதிரி வாயிலாக இந்திய அணி அதிக ரன்களை வழங்கியதும் நமது தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -