கை விரலில் ஏற்பட்ட காயம்.. 4 ஆவது போட்டியில் பண்ட் விளையாடுவாரா? மாட்டாரா? – சுப்மன் கில் அளித்த பதில்

Gill and Pant
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஃபார்மில் பேட்டிங் செய்து வருகிறார். இதுவரை இந்த தொடரில் 6 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர் 70 ரன்கள் சராசரியுடன் 425 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு அடுத்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரராகவும் இருந்து வருகிறார்.

ரிஷப் பண்டின் காயம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட : சுப்மன் கில்

அவரது அதிரடியான ஆட்டம் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தும் ஒன்றாக இருப்பதனால் அவரது இருப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு விடயமாக இருந்து வருகிறது. ஆனால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா பந்து வீசுகையில் கை விரலில் காயமடைந்த அவர் முதல் 34 ஓவர்கள் மட்டுமே கீப்பிங் செய்தார். அதன்பின்னர் கீப்பிங் செய்ய அவர் மீண்டும் வரவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

இருந்தாலும் பேட்டிங்கின் போது ஐந்தாவது வீரராக களமிறங்கிய அவர் முதல் இன்னிங்சில் 112 பந்துகளை சந்தித்து 74 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 12 பந்துகளை சந்தித்து 9 ரன்களையும் குவித்திருந்தார். இதன் காரணமாக அடுத்த நான்காவது போட்டியில் அவரால் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ரிஷப் பண்ட் விளையாடவில்லை என்றால் அது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்டின் காயம் குறித்த முக்கிய தகவலை மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பகிர்ந்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரிஷப் பண்ட் தற்போது நல்ல நிலைமையில் இருக்கிறார். அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு பெரிய காயம் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : கருண் நாயருக்கு பதிலாக 3 ஆம் இடத்தில் அந்த 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு தரலாம் – ரவி சாஸ்திரி கருத்து

இடது கையின் விரலில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் சில நாட்களில் குணமடைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் நிறைய நாட்கள் இடைவெளி இருப்பதினால் நிச்சயம் அவர் நான்காவது போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என கேப்டன் சுப்மன் கில் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement