கருண் நாயருக்கு பதிலாக 3 ஆம் இடத்தில் அந்த 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு தரலாம் – ரவி சாஸ்திரி கருத்து

Ravi Shastri and Karun
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கருண் நாயரை மாற்றும் எண்ணம் நிர்வாகத்திற்கும் இருக்கும் : ரவி சாஸ்திரி

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக எப்படியாவது நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடி வந்த கருண் நாயர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றம் அளித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியில் கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய அவர் 6 இன்னிங்சில் 131 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக அவரை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு வேறொரு வீரரை கொண்டுவர வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் : அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் யாரை களமிறக்க வேண்டும்? என்கிற யோசனை இந்திய அணிக்கும் இருக்கும்.

இதையும் படிங்க : ரவி சாஸ்திரியின் 44 ஆண்டுகால சாதனையை சமன் செய்த பும்ரா.. அதுவும் பேட்டிங்கில் – விவரம் இதோ

அதிலும் குறிப்பாக கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் அல்லது துருவ் ஜுரேல் ஆகிய இருவரில் யாரையாவது ஒருவரை களம் இறக்க கண்டிப்பாக அணி நிர்வாகம் யோசித்து வருவார்கள் என்று நினைக்கிறேன். துருவ் ஜுரேல் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார். எனவே அவருக்கு முழுநேர பேட்ஸ்மேனாக வாய்ப்பு கொடுக்கப்படலாம் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement