இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பத்தாவது வீரராக பேட்டிங் செய்ய களத்திற்கு வந்து ரவி சாஸ்திரியின் 44 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை சமன் செய்துள்ள ஒரு விடயம் தற்போது அனைவரது மத்தியிலும் அதிகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரவி சாஸ்திரியின் சாதனையை சமன் செய்த பும்ரா :
அந்த வகையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் நிதீஷ் ரெட்டி 13 ரன்களில் ஆட்டமிழந்த வேளையில் ரவீந்திர ஜடேஜாவுடன் பத்தாவது வீரராக பேட்டிங் செய்ய ஜஸ்ப்ரீத் பும்ரா ஜோடி சேர்ந்தார்.
இந்திய அணி 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது ஜடேஜாவுடன் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பும்ரா எந்த இடத்திலும் பொறுமையை இழக்காமல் பந்துகளை தடுத்து ஜடேஜாவிற்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். ஆனால் இறுதியாக 54 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இப்படி பும்ரா 54 பந்துகளை சந்தித்து விளையாடியதன் மூலம் தற்போது முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியின் 44 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதற்கு முன்னதாக இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாவது வீரராக களமிறங்கி அதிக பந்துகளை சந்தித்து வீரராக ரவி சாஸ்திரியே இருந்தார். கடந்த 1981-ஆம் ஆண்டு வில்லிங்டன் நகரில் நடைபெற்ற போட்டியின் போது பத்தாவது வீரராக களமிறங்கிய ரவி சாஸ்திரி 54 பந்துகளை சந்தித்து 19 ரன்களை குவித்திருந்தார்.
இதையும் படிங்க : ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் இருந்து முக்கிய வீரர் விலகல் – விவரம் இதோ
இந்நிலையில் அவரது இந்த சாதனையை சமன் செய்துள்ள பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சரியாக 54 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்கள் குவித்திருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி பத்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி 50 பந்துகளுக்கு மேல் சந்தித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் பும்ரா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



