அவங்க 2 பேர் என்மேல வச்சிருக்க நம்பிக்கை தான் எனது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – தினேஷ் கார்த்திக் பேட்டி

Dinesh-Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று ட்ரினிடாட் நகரில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது.

Dinesh Karthik Ashwin

- Advertisement -

துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 64 ரன்களையும், சூரியகுமார் 24 ரன்களையும் குவித்தனர். பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமலும், ரிஷப் பண்ட் 14 ரன்களிலும், ஹார்டிக் பாண்டியா ஒரு ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி பெரிய ரன் குவிப்பிற்கு செல்லாது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பின்வரிசையில் பினிஷராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியில் 19 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 41 ரன்கள் குவித்து அசத்தினார். கடைசி இரண்டு ஓவர்களில் தினேஷ் கார்த்திக் காட்டிய அதிரடி காரணமாக இந்திய அணி 190 ரன்கள் என்கிற நல்ல ரன் குவிப்பை எட்டியது. பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 அவர்களின் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

Dinesh Karthik 1

இதன் காரணமாக 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இறுதி நேரத்தில் களம் இறங்கி அதிரடி காட்டிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்-கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பின்னர் போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசுகையில் கூறியதாவது :

- Advertisement -

இந்த மைதானத்தில் பந்து சற்று நின்று வந்ததால் பேட்டிங் செய்ய கடினமாகவே இருந்தது. ஆனாலும் பந்தை கணித்து விளையாடியதால் என்னால் ரன்களை குவிக்க முடிந்தது. இந்திய அணியில் தற்போது எனக்கு கிடைத்திருக்கும் ரோல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், பயிற்சியாளர் டிராவிடும் என்மீது வைத்துள்ள நம்பிக்கை என்னை சிறப்பாக விளையாட வைக்கிறது.

இதையும் படிங்க : IND vs WI : அந்த 2 ஓவர் தான் நாங்கள் பெற்ற தோல்விக்கு காரணம் – நிக்கோலஸ் பூரான் வருத்தம்

எப்போதுமே மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப கிரிக்கெட் ஷாட்களை விளையாடினால் நிச்சயம் ரன்கள் வரும். அந்த வகையில் நான் வலைப்பயிற்சியின் போதும் கடினமான பயிற்சியை செய்தது வருகிறேன் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement