IND vs WI : அந்த 2 ஓவர் தான் நாங்கள் பெற்ற தோல்விக்கு காரணம் – நிக்கோலஸ் பூரான் வருத்தம்

Nicolas-Pooran
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்த இந்திய அணியானது அடுத்ததாக தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. அதன்படி நேற்று ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியையும் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsWI

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு எதிராக திணறி தொடர்ந்து ஆட்டம் இழந்ததன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

Arshdeep Singh IND vs WI

இதன் காரணமாக 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. பின்னர் போட்டி முடிந்து தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் கூறுகையில் : இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதோடு எங்களது அணியின் வீரர்களும் இந்த தோல்வியை நினைத்து வருத்தம் அடைந்துள்ளனர். இந்த டி20 தொடரின் முதல் போட்டியிலேயே நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஆனால் இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் இதிலிருந்து மீண்டு வர முயற்சிப்போம். இந்திய அணி பேட்டிங் செய்யும்போது முதல் 18 ஓவர்களில் 150 ரன்கள் வரை தான் குவித்து இருந்தனர். ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடி மொமென்டத்தை அவர்கள் பக்கம் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க : IND vs WI : முதல் 10 ஓவர் முடியும் போது எனக்கு நம்பிக்கையே இல்ல – வெற்றிக்கு பின்னர் ரோஹித் பேசியது என்ன?

பின்னர் பந்துவீச்சிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதால் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். இந்திய அணியின் ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தினர் என நிக்கோலஸ் பூரான் தனது வருத்தத்தை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement