3 ஆண்டுகால ஏக்கம் மட்டுமில்ல என்னோட ஒவ்வொரு நாள் கனவும் இதுதான் – மனம்திறந்த தினேஷ் கார்த்திக்

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான 37 வயது நிரம்பிய தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக கடந்த 2004-ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக பல போட்டிகளில் அவர் விளையாடியுள்ள அவர் தனக்கென ஒரு நிரந்தர இடம் இல்லாமல் உள்ளேயும், வெளியேயும் இருந்து வருகிறார். அதோடு 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் அதன் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து போராடி வந்தார்.

Dinesh Karthik

- Advertisement -

அதன்பின்னர் தற்போது 3 ஆண்டுகள் கழித்து நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி உள்ள தினேஷ் கார்த்திக்-க்கு அடுத்ததாக அயர்லாந்துக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியில் இடம் கிடைத்துள்ளது.

இப்படி தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய உலக கோப்பை அணியில் விளையாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது குறித்து சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தினேஷ் கார்த்திக் கூறுகையில் :

DInesh Karthik

இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது மிகவும் மகிழ்ச்சி, மிகவும் பெருமை. அணியின் ஒரு அங்கமாக நான் இருப்பதை நினைத்து பெருமையாக உணர்கிறேன். கடந்த மூன்று ஆண்டு காலமாக வெளியில் அமர்ந்து இந்திய அணியை ஏக்கத்துடன் பார்த்தேன். தற்போது மீண்டும் அதே அணியில் நான் ஒரு வீரராக மாறியதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

- Advertisement -

மூன்று ஆண்டுகள் நான் ஏங்கிய விடயமும், ஒவ்வொரு நாளும் கனவில் நான் எதிர்பார்த்த விடயம் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவேன் என்பதுதான். பலமுறை இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்டாலும் எனது உழைப்பின் மூலம் மீண்டு வந்துள்ளேன். உள்நாட்டு கிரிக்கெட் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடினாலும் இந்திய அணிக்காக தேசிய அணியில் விளையாட வேண்டும் என்பதுதான் நான் நாள்தோறும் காணும் கனவு.

இதையும் படிங்க : மத்தவங்க எல்லாம் போயிட்டாங்க. ஆனா ரோஹித் மட்டும் இங்கிலாந்து போக லேட் ஆகுமாம் – காரணம் இதுதான்

கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக நான் போராடி வருகிறேன். இந்த 15 ஆண்டு காலத்தில் கிரிக்கெட் நிறையவே மாறி விட்டது என்று நினைப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement