நான் இருந்ததுலேயே எனக்கு பிடிச்ச சிறந்த டீம்னா அது இதுதான் – தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான தினேஷ் கார்த்திக் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். தோனி போன்ற மாபெரும் வீரர் இந்திய அணியில் விளையாடியது காரணமாக அணியில் உள்ளேயும், வெளியேயும் இருந்த தினேஷ் கார்த்திக் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனாலும் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட தினேஷ் கார்த்திக்கின் கரியர் முடிந்துவிட்டது என்று அனைவரும் கூறி வந்தனர்.

Dinesh Karthik 1

- Advertisement -

ஆனால் பெங்களூரு அணிக்காக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஒரு ஃபினிஷராக அசத்திய தினேஷ் கார்த்திக் அதனை தொடர்ந்து தற்போது இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையிலும், இம்மாதம் துவங்க இருக்கும் ஆசிய கோப்பையிலும் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என்பது உறுதியாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் தான் விளையாடுவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் உயர் மட்டத்தில் விளையாடும் போது மட்டுமே அழுத்தத்தை சந்திக்க முடியும். அவ்வாறு அழுத்தத்தை சந்தித்து விளையாடுவது ஒரு பாக்கியம் மக்கள் என்னிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். அதனால் நானும் அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன்.

Dinesh Karthik Ashwin

ஒரு குறிப்பிட்ட நாளில் நாம் எதையும் உறுதியாக செய்து விட முடியும் என்று நினைத்திட முடியாது. ஒவ்வொரு நாளாக நமது முயற்சியை வெளிப்படுத்திக் கொண்டே வந்தால் அது நல்ல பலனைத் தரும். அந்த வகையில் தற்போது எனக்கு கிடைத்திருக்கும் வெகுமதியாக நான் பவர் ஹிட்டிங்கை பார்க்கிறேன் எனது கரியர் முழுவதுமே நான் இலக்காகக் கொண்ட ஒன்றை நோக்கி தற்போது பயணித்து வருகிறேன்.

- Advertisement -

தற்போதுள்ள இந்திய அணியின் பயிற்சியாளரும், கேப்டனும் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே நான் எனது செயல் திறனை அவர்களுக்காக நிரூபித்தாக வேண்டியது அவசியம். தற்போதைய இந்திய அணியில் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி நான் இருந்த அணிகளிலேயே சிறந்த சூழலைக் கொண்ட அணியாக இந்த இந்திய அணியை நினைக்கிறேன்.

இதையும் படிங்க : எந்த இடத்தில் யாரை நீக்கிவிட்டு செலக்ட் பண்ணுவீங்க – ஆசிய மற்றும் டி20 உ.கோ அணியில் டிகே இடத்துக்கு முன்னாள் வீரர் கேள்வி

தற்போது உள்ள அணியில் வீரர்களுக்கு நேரம் கொடுக்கப்படுகிறது. தோல்வியடைந்தாலும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. தோல்வியடையும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது என்பது மிக முக்கியம். அந்த வகையில் தற்போது உள்ள அணியையே சிறந்த அணியாக நான் நினைக்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement