எந்த இடத்தில் யாரை நீக்கிவிட்டு செலக்ட் பண்ணுவீங்க – ஆசிய மற்றும் டி20 உ.கோ அணியில் டிகே இடத்துக்கு முன்னாள் வீரர் கேள்வி

Team India Dinesh Karthik Ishan Kishan
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இத்தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி 2 போட்டிகள் ஆகஸ்ட் 6, 7 ஆகிய அடுத்தடுத்த தேதிகளில் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரை வென்று கோப்பையுடன் தாயகம் திரும்ப இந்தியா போராட உள்ளது.

Dinesh-Karthik

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா தடுமாறியபோது 41* ரன்கள் விளாசிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். கடந்த 2004இல் அறிமுகமாகி ஜாம்பவான் விக்கெட் கீப்பர் கேப்டன் தோனி இருந்ததால் பெரும்பாலும் வாய்ப்பு பெறாத இவர் கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடியதுடன் இந்திய அணியில் கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக செயல்படத் துவங்கியதால் அவரின் இந்திய கிரிக்கெட் கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனால் டி20 கிரிக்கெட்டில் தம்மால் சாதிக்க முடியும் என்று நம்பிய அவர் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக 330 ரன்களை 183.3 என்ற வெறித்தனமான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அதற்காக சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதையும் வென்றார்.

Dinesh Karthik

உறுதியான வாய்ப்பு:
அதன் காரணமாக 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்த அவர் தென் ஆப்பிரிக்க டி20 தொடர் உட்பட கிடைத்த வாய்ப்புகளில் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு 37 வயதுக்குப் பின் 2 ஆட்டநாயகன் விருது மற்றும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனைகளுடன் செயல்பட்டு வருகிறார். இந்த சிறப்பான செயல்பாடுகளுடன் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் ஆதரவும் இருப்பதால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்றே நம்பப்படுகிறது.

- Advertisement -

இருப்பினும் 37 வயதை கடந்துள்ள அவருக்கு ரிஷப் பண்ட், இஷான் கிசான், கேஎல் ராகுல் போன்ற இளம் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய வீரர்களும் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற முக்கியமான பினிஷிங் செய்யக்கூடிய வீரர்களும் இருப்பதால் வாய்ப்பு கிடைக்குமா என்பது ஒருபுறம் சந்தேகமாகவே இருந்து வருகிறது. அதுபோக ஐபிஎல் 2022 தொடருக்கு பின் இதுவரை அவருக்கு வாய்ப்பு கிடைத்த அத்தனை டி20 போட்டிகளிலும் பெரும்பாலான முக்கிய வீரர்கள் ஓய்வெடுப்பது அல்லது காயமடைவது என்ற வகையில் விலகியிருந்தனர்.

Dinesh-Karthik-and-Hardik-Pandya

யாரை நீக்குவீர்கள்:
ஆனால் அடுத்ததாக நடைபெறும் ஆசிய கோப்பையில் கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, தீபக் சஹர் உட்பட அனைத்து ஓய்வெடுத்த மற்றும் காயமடைந்த வீரர்கள் அணிக்கு திரும்புகிறார்கள். அந்த தொடரிலிருந்து தான் உலக கோப்பைக்கான இறுதி கட்ட அணியும் தேர்வு செய்யப்பட உள்ளது. அதனால் இந்த முக்கிய வீரர்களுக்கு மத்தியில் டி20 உலக கோப்பையில் விளையாட போகும் முதன்மையான வீரர்களை கொண்ட இந்திய அணியில் யாரை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்க்கு இடத்தை கொடுக்க முடியும் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் ரோகித் சர்மா, ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் 4 பந்துவீச்சாளர்கள் தான் விளையாடப் போகிறார்கள். எனவே நீங்கள் தினேஷ் கார்த்திக்கை எந்த இடத்தில் எப்படி வைத்து விளையாடுவீர்கள்? ஒருவேளை தினேஷ் கார்த்திக் பினிஷராக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பிங் செய்வதற்காக ரிஷப் பண்ட் இடம் பிடித்து கேஎல் ராகுல் நீக்கப்படுவாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாகும். இதை நான் ஏன் பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம்”

Aakash-Chopra-and-Dinesh-Chopra

“எனவே அனைத்து வகையிலும் சிந்தித்துப் பார்த்தால் என்னுடைய மிகப்பெரிய கேள்வியும் விடையும் என்னவெனில் தினேஷ் கார்த்திக் பினிஷராக மட்டுமே அணியில் இடம்பிடிக்க முடியும். ஆனால் அதற்காக யாரை நீங்கள் விட முடியும். உங்களிடம் ரோகித், ராகுல், விராட், சூர்யா, ஹர்டிக் மற்றும் 6வதாக பண்ட் இருப்பார். ஒருவேளை ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து விளையாடுவார்களா என்பதையும் இந்த ஆசிய கோப்பையில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement