- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆகாஷ் தீப் திறமைசாலி தான்.. ஆனாலும் அவர் இந்த விடயத்தை அவர் நிரூபிச்சாகனும் – தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயமாக காரணமாக அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பிறகு தற்போது எந்த காயத்தில் இருந்து படிப்படியாக குணமடைந்து வரும் அவர் மெல்ல மெல்ல பயிற்சிகளை துவங்கியுள்ளார். இதன் காரணமாக எவ்வளவு சீக்கிரத்தில் இந்திய அணியுடன் இணைய முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகாஷ் தீப் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் கிடையாது :

அதேவேளையில் தான் அவசரப்பட்டு இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க மாட்டேன் என்றும் முழு உடற்தகுதியுடன் தான் இந்திய அணியுடன் இணைவேன் என்றும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தெரிவித்துள்ளார். ஏனெனில் அவசரப்பட்டு இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகி காயத்தில் சிக்கினால் அது தனக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதனாலே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் முகமது ஷமி காயமடைந்த பிறகு அவருக்கான மாற்றுவீரரை தேடும் பணியில் இந்திய அணியின் நிர்வாகம் இறங்கிய வேளையில் அந்த இடத்தை அண்மையில் அறிமுகமான ஆகாஷ் தீப் கெட்டியாக பிடித்துக் கொண்டார் என்றே கூறலாம். ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் அறிமுகமான அவர் அந்த போட்டியின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அதன்பின்னர் தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரிலும் அவர் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதால் ஆஸ்திரேலிய தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என்றும் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் அவர்தான் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் :

- Advertisement -

ஆகாஷ் தீப் ஒரு திறமையான பந்துவீச்சாளர் தான். ஆனாலும் அவர் இன்னும் பழைய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆகாஷ் தீப் புதுப்பந்தில் தான் விக்கெடுகளை எடுத்து வருகிறார். ஆனால் பழைய பந்தில் அவரால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. இருப்பினும் அவர் உள்ளூர் தொடர்களில் பழைய பந்தில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். எனவே வெகுவிரைவில் அவர் பழைய பந்திலும் விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு வரும் மாயங்க் யாதவ்.. 2 பேரோட சப்போர்ட் இருக்கும்போது யாராலும் தடுக்க முடியாது – விவரம் இதோ

தற்போதைக்கு நான் அவரை இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனாலும் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அவர் ஆஸ்திரேலிய தொடருக்கான விமானத்தில் இடம் பிடிப்பார். அதேபோன்று தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் வேளையில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவதால் இந்திய அணியின் பந்துவீச்சு பலம் அதிகரித்தே காணப்படுவதாக தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -