இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூர் நகரில் நேற்று செப்டம்பர் 27-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணிக்கு வரும் மாயங்க் யாதவ் :
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரானது முடிவடைந்ததற்கு பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது எதிர்வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த டி20 அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால் முன்னணி நட்சத்திர வீரர்கள் பலருக்கும் இந்த டி20 தொடரில் ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக பந்துவீச்சு துறையில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஏனெனில் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களாக தற்போது பும்ரா, முகமது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டுமே உள்ளனர். எனவே அவர்களை சரியான தொடர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஓய்வு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ஐபிஎல் தொடரின் போது அதிவேகமாக பந்துவீசி கலக்கிய லக்னோ அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மாயன் யாதவ் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் மயக்க யாதவ் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி அசத்துவதோடு மட்டுமின்றி தற்போது காயத்திலிருந்து படிப்படியாக முன்னேறி உள்ளார்.
இதையும் படிங்க : அஸ்வினுக்கு மட்டும் ஏன் சப்போர்ட் பண்றிங்க? இந்தாங்க ஆதாரம்.. ரோஹித்தை விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கர்
ஏற்கனவே லக்னோ அணிக்காக பணியாற்றியிருந்த கம்பீர் மற்றும் மோர்கல் ஆகிய இருவரும் அவரது திறமையை பார்த்திருப்பதால் நிச்சயம் இந்த டி20 தொடரில் தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி கம்பீரும், மோர்கலும் அவரை சேர்க்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அவர் இந்திய அணியில் இடம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



