நீங்க எதைப்பத்தியும் வாயே துறக்க கூடாது. தினேஷ் கார்த்திக்குக்கு வேண்டுகோள் வைத்த – பி.சி.சி.ஐ

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட்ருமான தினேஷ் கார்த்திக் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியோடு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியில் விளையாடாமல் இருந்த தினேஷ் கார்த்திக் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஃபினிஷராக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

Dinesh Karthik 1

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்திய டி20 அணியில் மீண்டும் விளையாட துவங்கியுள்ள தினேஷ் கார்த்திக் பினிஷராக நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய தொடர்களில் இடம் பெற்று விளையாடினார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலும் இடம் பிடித்த அவர் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் 19 பந்துகளுக்கு 41 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் நிச்சயம் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என்பது உறுதியாக்கியுள்ளது. இந்நிலையில் 37 வயதான தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையில் விளையாடுவது மட்டுமின்றி அடுத்து 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெறுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Dinesh-Karthik

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் நீங்கள் விளையாடுவீர்களா? என்ற கேள்வி தினேஷ் கார்த்திக்-கிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக் கூறுகையில் :

- Advertisement -

தற்போது பிசிசிஐ-யிடம் இருந்து எனக்கு ஒரு வேண்டுகோள் வந்துள்ளது. அதன்படி நான் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடிக்கும் வரை அணி தேர்வு குறித்தும், அணியில் உள்ள விவரங்கள் குறித்தும் எதுவும் பேசக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அவங்க 2 பேர் என்மேல வச்சிருக்க நம்பிக்கை தான் எனது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – தினேஷ் கார்த்திக் பேட்டி

எனவே தற்போதைக்கு நான் இந்திய அணியின் அடுத்த அடுத்த திட்டங்கள் குறித்து எதையும் பேச விரும்பவில்லை. காலங்கள் அனைத்திற்கும் பதில் சொல்லும் என்பது போன்று தனது கருத்தினை வெளியிட்டு இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement