இவர் விளையாடுறத பாக்கும்போது அப்படியே சேவாக் விளையாடுற மாதிரி இருக்கு – தினேஷ் கார்த்திக் பாராட்டு

Karthik
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியானது இங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் தொடரையும் 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இரண்டு தொடர்களிலும் இலங்கை அணியை வாஷ் அவுட் செய்து அசத்தலான வெற்றியை பெற்றது.

IND

- Advertisement -

ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக பதவி ஏற்றதில் இருந்து தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றிகளை குவித்து வருவதால் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபலங்கள், முன்னாள் வீரர்கள், ஜாம்பவான்கள் என பலரும் இந்திய அணி குறித்தும், இந்திய அணியில் உள்ள வீரர்கள் குறித்தும் தங்களது பாராட்டுக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வீரரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் இந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

Pant

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடர் முழுவதுமே ரிஷப் பண்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இதுபோன்று விளையாடும் போது நிச்சயம் எதிரணி பவுலர்கள் பயப்படுவார்கள். அந்த அளவிற்கு அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாகவே தனது கீப்பிங்கிலும் கவனத்தைச் செலுத்தும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

என்னை பொருத்தவரை இந்திய அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் தோனி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே இடம் பிடிப்பார்கள் என்று தோன்றுகிறது. இளம் வீரரான ரிஷப் பண்ட் புதிதாக பல விடயங்களை முயற்சி செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். அவர் அதிரடியாக விளையாட அஞ்சுவதில்லை என்னைப் பொருத்தவரை பவுண்டரிகளை அடித்து பவுலர்களை அறவிடும் சேவாக் போன்று ரிஷப் பண்ட்டும் விளையாடுகிறார்.

இதையும் படிங்க : இத்தனை வருசம் தூங்குனீங்கள! முகமது கைஃபை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் – அப்படி என்ன நடந்தது?

பவுலர்களை எதிர்த்து விளையாடும்போது தனது பாரபட்சமில்லாத அதிரடியை வெளிப்படுத்தும் ரிஷப் பண்ட் அப்படியே சேவாக்கை நியாபகப்படுத்துகிறார். சேவாக் ஸ்டைலை அப்படியே பண்ட்டிடம் பார்ப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement