ரிஷப் பண்ட் பண்ண இந்த விஷயத்தை பாத்தா தோனியே பெருமைப்படுவாரு – தினேஷ் கார்த்திக் புகழாரம்

DK-MS-RP
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கியமான தொடராக பார்க்கப்படும் இந்த வங்கதேச தொடரை இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த வேளையில் முதல் போட்டியிலேயே இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டின் சிறப்பான செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ரிஷப் பண்ட் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் கூட முதல் இன்னிங்ஸ்ஸில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதிரடியாக 46 ரன்களை குவித்து அணியின் ரன் குவிப்பை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்தார். அதோடு விக்கெட் கீப்பிங்கிலும் இந்த போட்டியில் அசத்தினார் என்றே கூறலாம்.

ஏனெனில் விராட் கோலி தவறவிட்ட கேட்சை டைவ் அடித்து பிடித்தது மட்டுமின்றி வங்கதேச வீரர் நூருல் ஹாசனை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அசத்தியிருந்தார். இப்படி தனது சிறப்பான விக்கெட் கீப்பிங்கின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவரது இந்த செயல்பாடு குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

தோனி மட்டும் ரிஷப் பண்ட் செய்த இந்த ஸ்டம்பிங்கை பார்த்தால் நிச்சயம் பெருமைப்படுவார். ஏனெனில் அந்த அளவிற்கு அற்புதமாக ரிஷப் பண்ட் அந்த ஸ்டம்பிங்கை செய்திருந்தார். பந்து பேட்ஸ்மடை தாண்டியதும் ஸ்டம்பிற்கு அருகில் தயாராக இருந்த அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை ஸ்டம்பிங் செய்து அசத்தியிருந்தார். அவரது இந்த கீப்பிங் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது.

இதையும் படிங்க : அந்த 2 இந்திய ஜாம்பவான்களே என்னை பாராட்டிடாங்க, வேற என்ன வேணும் – அறிமுக போட்டியிலேயே சாதித்த ஜாகிர் ஹசன் மகிழ்ச்சி

உண்மையிலேயே அவர் தன்னுடைய கீப்பிங் திறனை மேம்படுத்தி உள்ளார். ஏற்கனவே தோனியிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்ற இவர் இவ்வாறு செயல்பட்டதில் நிச்சயம் தோனிக்கு பெருமையாகவே இருக்கும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement