அந்த 2 இந்திய ஜாம்பவான்களே என்னை பாராட்டிடாங்க, வேற என்ன வேணும் – அறிமுக போட்டியிலேயே சாதித்த ஜாகிர் ஹசன் மகிழ்ச்சி

Zakir Hasan Bang
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் வங்கதேசம் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை மெஹதி ஹசன் மேஜிக்கில் 2 – 1 (3) என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய அந்த அணி முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 404, 258/2 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக புஜாரா 90, 102* ஸ்ரேயாஸ் ஐயர் 86, சுப்மன் கில் 110 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை குவித்தனர். மறுபுறம் முதல் இன்னிங்ஸில் முதல் பந்திலிருந்தே விக்கெட்களை இழந்து வெறும் 150 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்ற வங்கதேசம் 2வது இன்னிங்ஸில் கடுமையான சவாலை கொடுத்து 324 ரன்கள் குவித்து போராடி தோற்றது. அந்தப் போராட்டத்திற்கு அறிமுகப் போட்டியில் களமிறங்கி அசத்தலாக செயல்பட்ட ஜாகிர் ஹசன் முதல் இன்னிங்ஸ் 20 ரன்களில் அவுட்டானாலும் 2வது இன்னிங்ஸில் அற்புதமான சதமடித்து 100 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அவரே பாராட்டிட்டாரு:
அதிலும் குறிப்பாக 2வது இன்னிங்ஸில் சாண்டோவுடன் இணைந்து 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக 100+ ரன்கள் குவித்த முதல் வங்கதேச ஓப்பனிங் ஜோடி என்ற வரலாற்றையும் எழுதினார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடிக்கும் 4வது வங்கதேச வீரர் 2012க்குப்பின் அறிமுக போட்டியிலே சதமடிக்கும் முதல் வங்கதேச வீரர் என்ற சாதனைகளையும் அவர் படைத்தார். முன்னதாக கடந்த வாரம் இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வங்கதேச ஏ அணிக்காக 173 ரன்கள் குவித்து அசத்திய காரணத்தால் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்ற அவர் முதல் போட்டியிலேயே அசத்தியுள்ளார்.

இந்நிலையில் முதல் போட்டியில் தாம் சிறப்பாக விளையாடியதாக இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தம்மை பாராட்டியதாக ஜாகிர் ஹசன் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு. “ராகுல் சார் என்னை வாழ்த்தினார். அவர் நான் சிறப்பாக பேட்டிங் செய்ததாக என்னிடம் தெரிவித்தார். அவரைப் போன்ற ஒரு மிகச்சிறந்த வீரர் மற்றும் பயிற்சியாளர் என்னை தாமாக முன்வந்து பாராட்டுவது எனக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. அது எனக்கு மிகப் பெரிய உணர்வை கொடுக்கிறது”

- Advertisement -

“அதே போல் சதமடித்ததும் விராட் கோலி என்னை பாராட்டினார். அதற்கு நானும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இந்த சதத்தால் நானும் நல்லபடியாக உணர்கிறேன். இப்போட்டியில் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதிக நேரம் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடினேன். குறிப்பாக பெரிய இலக்கை துரத்த 2 நாட்கள் இருந்ததால் நான் நங்கூரமாக விளையாட நினைத்தேன். பொதுவாக நான் 3, 4 ஆகிய இடங்களில் தான் விளையாடுவேன். ஓப்பனிங்கில் விளையாடியதில்லை. இருப்பினும் முதல் தர கிரிக்கெட்டில் நான் புதிய பந்துகளை எதிர்கொண்டுள்ளேன்”

“குறிப்பாக 3வது இடத்தில் விளையாடும் போது விரைவிலேயே புதிய பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்ததால் நான் நல்ல தன்னம்பிக்கையுடன் உள்ளேன். மேலும் இந்தியா ஏ அணிக்கு எதிராக 173* ரன்கள் குவித்தது எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுத்தது. அதில் விளையாடியது போலவே இப்போட்டியிலும் விளையாட முயற்சித்தேன். அந்த பெரிய ஸ்கோர் தான் எனக்கு தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றுக் கொடுத்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: வீக்னெஸ் இல்லாமல் யாருமில்லை, தோனி மாதிரி அவரும் மேட்ச் வின்னராக உருவாகிட்டாரு – இளம் வீரரை பாராட்டும் முகமத் கைஃப்

முன்னதாக இத்தொடரில் விளையாட அறிவிக்கப்பட்டிருந்த நட்சத்திர தொடக்க வீரர் தமீம் இஃபால் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறிய சமயம் இந்தியா ஏ அணிக்கு எதிராக 173 ரன்கள் குவித்த ஜாகிர் அலி 24 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார். அதில் சதமடித்துள்ள அவர் ராகுல் டிராவிட் பாராட்டும் அளவுக்கு வங்கதேசத்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர வீரராக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement