வீக்னெஸ் இல்லாமல் யாருமில்லை, தோனி மாதிரி அவரும் மேட்ச் வின்னராக உருவாகிட்டாரு – இளம் வீரரை பாராட்டும் முகமத் கைஃப்

Kaif
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்று கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கிய அப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ராகுல் தலைமையில் புஜாரா, சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் பேட்டிங்கில் அசத்திய இந்தியாவை பவுலர்களும் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி பெற வைத்தனர்.

Shreyas Iyer

- Advertisement -

குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 112/4 என இந்தியா தடுமாறிய போது களமிறங்கிய இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் புஜாராவுடன் இணைந்து 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். கடந்த டிசம்பர் மாதம் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் இதுவரை விளையாடிய 10 இன்னிங்ஸ்களிலும் இரட்டை இலக்க ரன்களை எடுத்து அசத்தி வருகிறார்.

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை படைத்த அவர் இந்த வருடம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சூரியகுமார் யாதவ் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் 2023 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

Shreyas Iyer

தோனி மாதிரி:

இருப்பினும் சுழல் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கும் அவர் உயரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் எலியைப் போல் அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அந்த பலவீனத்தைக் கொண்டிருந்தாலும் அதையும் கடந்து இந்த வருடம் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளது அவரது திறமையை காட்டுகிறது. அதனால் வருங்கால நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக அறியப்படும் அவரிடம் தோனியை போல் போட்டிகளை இந்தியாவுக்கு வென்று கொடுக்கும் திறமை கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைப் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும் உலகில் வீக்னஸ் இல்லாதவர்கள் யாருமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நாம் எப்போதும் தோனியை பற்றி பேசுவோம். அவர் பாடப்புத்தக பேட்டிங்கை பின்பற்றாவிட்டாலும் ரன்களை அடித்து இந்தியாவுக்கு போட்டிகளை வென்று கொடுத்தவர். ஸ்ரேயாஸ் ஐயரும் அதே கிளாஸ் நிறைந்தவர். அவருக்கு எப்படி ரன்கள் குவிக்க வேண்டும் என்பது தெரிகிறது. அவரிடம் ஃபுல் ஷாட் அடிக்கும் போது அவுட்டாகும் வீக்னஸ் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி அவர் 2022இல் நல்ல சாதனைகளை படைத்துள்ளார். நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் பெரிய ரன்களை குவிக்கிறார்”

kaif

“குறிப்பாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் பெரிய ரன்கள் அடித்தது பெரிய விஷயமாகும். அவரது ரன்களால் தான் இந்தியா முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. நல்ல டிரைவ் ஷாட்டுகளை அடிக்கும் அவர் கால்களை பயன்படுத்தி விளையாடுகிறார். அந்த வகையில் அவர் முழுமையான பேட்ஸ்மேன். அவர் பவுன்சர் பந்துகளில் தடுமாறுகிறார் என்றாலும் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களிடமும் ஏதோ ஒரு வீக்னஸ் இருக்கும். என்னைக் கேட்டால் இந்த வீக்னெஸ் அவரது வாழ்க்கை முழுவதும் இருக்கலாம். அதை அவர் எப்போதும் சமாளிக்க வேண்டும்”

இதையும் படிங்க: IND vs BAN : பேசாம வீட்லயே உட்காருங்க – 2வது டெஸ்டில் வரப்போகும் நட்சத்திர இந்திய வீரருக்கு அஜய் ஜடேஜா அறிவுரை

“ஆனால் அதையும் தாண்டி அவர் இப்போதே பாராட்டும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அறிமுகப் போட்டியிலே நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் அவர் சதமடித்தார். அவரிடம் எந்த இடத்தில் அடிக்க வேண்டும், சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படி தடுப்பாட்டம் ஆட வேண்டும், கட் ஃபுல் பேக் ஃபுட் மற்றும் தூக்கி அடிக்கும் ஷாட்டுகளை விளையாடும் அனைத்து திறமைகளும் உள்ளது” என்று பாராட்டினார்.

Advertisement