IND vs BAN : பேசாம வீட்லயே உட்காருங்க – 2வது டெஸ்டில் வரப்போகும் நட்சத்திர இந்திய வீரருக்கு அஜய் ஜடேஜா அறிவுரை

Ajay
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள இந்தியாவுக்கு முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் விளையாடவில்லை.

Shubman Gill Century

- Advertisement -

இருப்பினும் ராகுல் தலைமையில் புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற அனுபவம் கலந்த இந்திய வீரர்களின் பொறுப்பான செயல்பாடுகளாலும் பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான செயல்பாடுகளாலும் 5 நாட்களும் சவாலை கொடுத்த வங்கதேசத்தை முக்கிய நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு சாய்த்த இந்திய அணியினர் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். குறிப்பாக காயமடைந்த ரோகித் சர்மாவுக்கு பதில் நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற இளம் வீரர் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதமடித்து இப்போட்டியில் மொத்தம் 130 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

ஒன்னும் வேண்டாம்:

இருப்பினும் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் காயமடைந்த ரோகித் சர்மா டிசம்பர் 22ஆம் தேதி துவங்கும் இத்தொடரின் 2வது போட்டிக்கு குணமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த செய்தியைக் கேட்கும் பெரும்பாலான ரசிகர்கள் “ஒன்றும் வேண்டாம் இளம் வீரரான சுப்மன் கில் தொடர்ந்து விளையாடட்டும்” என்று வேண்டா வெறுப்பாக பதிலளிக்கிறார்கள். ஏனெனில் ஒரு காலத்தில் அதிரடி சரவெடியாக செயல்பட்டு ஹிட்மேன் என்று பெயரெடுத்த ரோகித் சர்மா சமீப காலங்களாக குறிப்பாக கேப்டன் பொறுப்பேற்ற பின் ரன்களை குவிக்கத் திண்டாடி வருகிறார்.

Rohit-Sharma

அத்துடன் கேப்டனாகவும் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் சமீப காலங்களில் தடுமாறும் அவர் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதனால் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட புதிய அணியை உருவாக்கும் வேலைகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் முழுமையாக குணமடையாமல் மீண்டும் அவசரமாக களமிறங்கினால் காயம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்க முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா முழுமையாக குணமடையும் வரை பேசாமல் வீட்டில் அமருங்கள் என்று ரோகித் தர்மாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அதனால் தான் ரோகித் சர்மா வீட்டில் அமர வேண்டுமென்று நான் வலியுறுத்துகிறேன். ஏனெனில் ஒரு வீரர் கையில் காயத்தை சந்திக்கும் போது அடுத்த 10 நாட்களுக்கு பேட்டை கையில் பிடிக்க முடியாது. அது போன்ற சமயங்களில் நீங்கள் குணமடைந்தாலும் அடுத்த நாளே அணியில் இணைந்து விளையாட முடியாது. அது முழுமையாக குணமடைய அடுத்த 10 முதல் 15 நாட்கள் தேவைப்படும்”

Ajay-Jadeja

“போதாக்குறைக்கு இப்போது வரை அவருடைய காயத்தை பற்றிய முழுமையான விவரங்கள் யாருக்குமே தெரியாது. எனவே இதற்கான தற்காலிக தீர்வை நாம் பார்க்க கூடாது. என்ன பொறுத்த வரை அவருடைய தற்போதைய நிலைமைக்கு இது தான் சரியான நிரந்தர தீர்வாக அமையும் என்று” கூறினார். அதாவது சமீப காலங்களில் ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சஹர் போன்ற வீரர்கள் முழுமையாக குணமடையாமல் மீண்டும் அவசரமாக இந்தியாவுக்காக விளையாட வந்து ஒரு சில போட்டிகளில் மீண்டும் காயமடைந்து வெளியேறினார்கள்.

இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டை வீழ்த்தியது எப்படி? – ஆட்டநாயகன் குல்தீப் யாதவ் கருத்து

அந்த வரிசையில் ரோகித் சர்மாவும் 2வது போட்டியில் அவசரமாக களமிறங்கினால் மீண்டும் காயத்தை சந்திக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கும் அஜய் ஜடேஜா முழுமையாக குணமடையும் வரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தற்போதைய அணியில் அவரது இடத்தில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதாலும் ஏற்கனவே முதல் போட்டியில் இந்தியா வென்று விட்டதாலும் அவர் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்றும் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

Advertisement